முகப்பு
உலகம்

டிமோர்-லெஸ்டேவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

அதிபர் ஜோஸ் ராமோஸ்வுடன் சந்திப்பு நிகழ்த்த உள்ளார்.

Updated On : 10 ஆகஸ்ட், 2024 at 12:57 PM
டிமோர் லெஸ்டேவில் முர்மு
பகிர்:

தனது பயணத்தின் இறுதிக் கட்டமாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு டிமோர்-லெஸ்டே வந்தடைந்தார்.

அரசுமுறைப் பயணமாக மூன்று நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அதில் முதலாவதாக தெற்கு பசிபிக் சாடான ஃபிஜி தீபகற்ப நாட்டுக்கு வருகை தந்தார்.

அந்த நாட்டு அதிபர் ரது வில்லியம்சை சந்தித்து பேசினார். அதன் பின்னர் அந்நாட்டின் நாடாளுமன்றத்திலும் அவர் உரையாற்றினார். அதன்பிறகு புலம் பெயர்ந்த இந்தியர்களுடன் உரையாற்றினார்.

Advertisement

திரௌபதி முர்முவை வரவேற்ற மாணவர்கள்

தனது இரண்டாவது பயணமாக நியூசிலாந்து சென்று குடியரசுத் தலைவருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அவர் இருதரப்பு உறவுகள் மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு குறித்து விவாதித்தார்.

பயணத்தின் நிறைவாக அவர் இன்று திமோர்-லெஸ்தே வந்தடைந்தார். தென்கிழக்கு ஆசிய நாட்டிற்கு இந்திய அரசு தலைவர் மேற்கொண்ட முதல் வருகை இதுவாகும்.

விமான நிலையத்தை வந்தடைந்த முர்முவுக்கு அந்நாட்டு அதிபர் ஜோஸ் ராமோஸ்-ஹோர்டா மற்றும் பள்ளி குழந்தைகள் அன்புடன் வரவேற்றனர்.

இதன்பின்னர், அதிபர் ஜோஸ் ராமோஸ்வுடன் சந்திப்பு நிகழ்த்த உள்ளார். இந்த சந்திப்பின் முக்கியத்துவமாக இருதரப்பு உறவு மேம்படும். மேலும் இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்களுடன் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.