FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஈஸ்டர் திருநாள்: குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஈஸ்டர் திருநாளில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, தவெக தலைவர் விஜய் வாழ்த்து

Updated On : 5 ஏப்ரல் 2026, 10:06 am IST
ஈஸ்டர் திருநாள் - DNS
பகிர்:

ஈஸ்டர் திருநாளில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஈஸ்டர் திருநாளையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்து, தனது எக்ஸ் பக்கத்தில், "அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவுகூரும் இந்த நன்னாள், உண்மை, அன்பு, இரக்கம், தியாகம், மன்னிப்பு முதலானவற்றின் மதிப்புகளை அறிந்துகொள்ள ஊக்குவிக்கிறது.

இந்த நன்னாளில் நல்லிணக்கம், அமைதி, சகோதரத்துவத்தை மேம்படுத்துவதுடன், சிறந்த எதிர்காலத்துக்காக ஒன்றிணைந்து பாடுபடுவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

மேலும், ஈஸ்டர் திருநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "இந்த புனிதமான நன்னாளில் நம்பிக்கையையும் புத்துணர்ச்சியையும் கொண்டாடுகிறது. இந்த நன்னாளில் அனைவரின் வாழ்க்கையிலும் அமைதி, மகிழ்ச்சி, ஒளியைக் கொண்டுவரட்டும்.

இயேசு கிறிஸ்துவின் போதனைகள், நம் அனைவரையும் கருணை, அன்புடன் இருக்கவும், சமூகத்தில் ஒற்றுமையை வலுப்படுத்தவும் ஊக்குவிக்கிறது" என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து, தவெக தலைவர் விஜய், "இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நன்னாளை ஈஸ்டர் திருநாளாகக் கொண்டாடும் சகோதர, சகோதரிகளுக்கு நல்வாழ்த்துகள்.

இத்திருநாளில் அனைவரிடமும் அன்பு, சமாதானம், கருணை, சகோதரத்துவம், மனிதநேயம் ஆகியவை வளர்ந்தோங்கி நிலைக்கட்டும்" என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

summary

Easter: President and Prime Minister Extend Greetings!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments