உலகம்

உக்ரைனுடனான சண்டையில் இந்தியர்கள் பலி: ரஷியா இரங்கல்!

ரஷிய ராணுவத்தில் உள்ள இந்தியர்கள் விரைவில் விடுவிப்பு...

DIN

உக்ரைனுடனான சண்டையில் இந்தியர்கள் பலியானதற்கு ரஷியா இரங்கல் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த மாதம் ரஷிய அதிபருடான சந்திப்பின்போது அவரிடம் பிரதமர் மோடி, இந்தியர்கள் பலர் ரஷிய ராணுவத்தில் பணியாற்றுவது குறித்தும், அவர்களை விடுவிப்பது குறித்தும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில், ரஷிய தூதரகம் இன்று இவ்விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

புதுதில்லியிலுள்ள ரஷிய தூதரகம் சனிக்கிழமை(ஆக. 10) வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷிய ராணுவத்தில் சேவையாற்றி உக்ரைனுடனான சண்டையில் உயிரிழந்த இந்தியர்களுக்காக அவர்களது குடும்பங்களுக்கும் இந்திய அரசுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஏப்ரல் மாதம் முதல், ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் இந்தியா உள்பட வெளிநாடுகளைச் சேர்ந்த குடிமக்களை தங்கள் நாட்டு ராணுவத்தில் சேர்ப்பதை நிறுத்திவிட்டது. மேலும், இந்தியர்களை தங்கள் நாட்டு ராணுவத்தில் சேர்ப்பது குறித்து ரஷிய அரசு எவ்வித பிரசாரங்களிலும் ஈடுபடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷிய ரணுவத்தில் பணிபுரியும் இந்தியர்களை விரைந்து விடுவிப்பதில் இந்தியா- ரஷியா ஆகிய இரு நாடுகளும் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அளித்துள்ள பதிலில், ரஷிய ராணுவத்தில் இதுவரை 91 இந்தியர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், ரஷிய ரணுவத்தில் பணியாற்றிய 8 இந்தியர்கள் துரதிருஷ்டவசமக உயிரிழந்துவிட்டதாகவும், இன்னும் 69 பேர் விடுவிக்கப்படாமல் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியர்களை குறிவைத்து ஆள்கடத்தல் கும்பல்கள் சில வெளிநாடுகளில், குறிப்பாக ரஷியாவில் வேலை வாங்கித் தருவதாக சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்தி மக்களை நம்பவைத்து, ரஷியாவில் சண்டை நிகழும் பகுதிகளுக்கு அனுப்பி வைத்துள்ளதை சிபிஐ கண்டறிந்தது. இதனைதொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் மேற்கண்ட கும்பலைச் சார்ந்த முக்கிய நபர்கள் சிபிஐயிடம் பிடிபட்டதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

பிரதமா் மோடி குறித்து அவதூறு : காங்கிரஸ் தலைவா்களை கண்டித்து பாஜக ஆா்ப்பாட்டம்

ஏற்காட்டில் தொடா் மழையால் கடும் குளிா், பனி மூட்டம்

ரத்தச் சுத்திகரிப்பு நிலையங்களின் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அமைச்சா் உத்தரவு

கூடங்குளம் அருகே இளைஞா் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள்

SCROLL FOR NEXT