இமென் கெலிஃப் (கோப்புப் படம்)  AP
உலகம்

மக்களின் மனதில் உள்ள என்னைப் பற்றிய எண்ணத்தை மாற்ற விரும்புகிறேன்: இமென் கெலிஃப்

ஆன்லைன் பதிவுகளால் மனரீதியாக துன்புறுத்தப்பட்டதாக இமென் கெலிஃப் ஆதங்கம்

இணையதளச் செய்திப் பிரிவு

அல்ஜீரிய குத்துச்சண்டை வீராங்கனை இமென் கெலிஃபுக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகளால் மனரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானதால், வழக்குப்பதிவு செய்துள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற அல்ஜீரிய வீராங்கனை இமென் கெலிஃப், தன்னைப் பற்றிய பாலியல் ரீதியான அவதூறு கருத்துகளை சிலர் சமூக ஊடகங்களில் பரப்பியது தொடர்பாக, ஆக. 10, சனிக்கிழமையில் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து இமென் கூறியதாவது, "சமூக ஊடகங்களில் என்னைப் பற்றி கூறப்படுவது அனைத்தும் ஒழுக்கக்கேடானது. உலகெங்கிலும் உள்ள மக்களின் மனதில் உள்ள என்னைப் பற்றிய எண்ணத்தை மாற்ற விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் குத்துச்சண்டைப் பிரிவில், சீனாவின் யாங் லியூவை எதிர்த்துப் போட்டியிட்ட அல்ஜீரிய வீராங்கனை இமென் கெலிஃப் 5-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று, தங்கப் பதக்கம் வென்றார்.

ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் கெலிஃபுக்கும், இத்தாலிய வீராங்கனை ஏஞ்ஜெலா காரினிக்கும் இடையே நடந்த போட்டியில், கெலிஃபின் அடியைத் தாங்க முடியாமல், போட்டி தொடங்கிய 45 வினாடிகளிலேயே, போட்டியிலிருந்து விலகுவதாக காரினி அறிவித்தார்.

மேலும், ``கெலிஃபின் தாக்குதல் ஒரு பெண்ணைப் போன்றதாக இல்லை’’ என்று காரினி கூறியதையடுத்து, இமெனின் பெண்மை குறித்து, பலரும் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பியிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

10 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

ரேஷ்மாவின் புதிய சீரியல்: ராமாயணம் தொடரின் நேரத்தை மாற்ற வேண்டாம் என கோரிக்கை!

EPS- உடன் கூட்டணி வைப்பதற்கு பதிலாக தூக்கில் தொங்கலாம் - TTV Dhinakaran

ஹாலிவுட் தொடரில் நடிக்கும் சித்தார்த்!

கிர்க் கொலைக்காகக் கொண்டாட்டமா? வெளியேறத் தயாராக இருங்கள்! வெளிநாட்டினருக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

SCROLL FOR NEXT