தென் கொரியாவில் வெப்ப அலைக்கு 2,300 பாதிப்பு, 21 பேர் பலி!
வெப்பம் தாக்குதல் தொடர்பான நோய்களுக்கு இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
தென் கொரியாவில் வெப்பம் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,300 ஆக உயர்ந்துள்ளதாக உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் வெப்ப அலை கொளுத்திவரும் நிலையில், அங்குள்ள மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மே 20 முதல் ஆகஸ்ட் 11 வரையிலான காலகட்டத்தில் வெப்பம் தாக்குதல் தொடர்பான நோய்களுக்கு இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே மே 20 முதல் ஆகஸ்ட் 11 வரை வெப்பம் தொடர்பான நோய்களுக்கு மொத்தம் 2,293 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 2,139 ஆக இருந்தது.
Advertisement
வெப்ப அலைக்கு கால்நடைகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 6,58,000 கோழிகள் உள்பட 7,03,000 கால் நடைகளும், 8,95,000 வளர்ப்பு மீன்களும் இறந்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப அலை தொடரும் என்றும், இரவு நேரங்களில் மேற்குப் பகுதி மற்றும் கடலோரப் பகுதிகளைத் தாக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை பகல் நேர வெப்பநிலை நாடு முழுவதும் 30-36 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என அந்நாட்டு ஐஎம்டி தெரிவித்துள்ளது.