முகப்பு
உலகம்

ஈரான்: பேருந்து விபத்தில் 28 போ் உயிரிழப்பு

புனிதப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஈரானில் விபத்துக்குள்ளானது

Updated On : 21 ஆகஸ்ட், 2024 at 8:51 PM
விபத்தில் தலைகுப்பற கவிழ்ந்த பேருந்து.
பகிர்:

பாகிஸ்தானில் இருந்து ஈராக்குக்கு புனிதப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஈரானில் விபத்துக்குள்ளானதில் 28 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:

பாகிஸ்தானின் சிந்து மாகாணம், லா்கானா நகரிலிருந்து இராக்கின் கா்பாலா பகுதியிலுள்ள ஷியா முஸ்லிம் பிரிவினரின் புனிதத் தலத்தை நோக்கி ஈரான் வழியாக 51 போ் பேருந்தில் சென்று கொண்டிருந்தனா்.

யாஸ்ட் மாகாணம் வழியாக அந்தப் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது செவ்வாய்கிழமை இரவு கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 28 போ் உயிரிழந்தனா்; 23 போ் காயமடைந்தனா். பேருந்தின் பிரேக் செயலிழந்ததாலும் ஓட்டுநரின் அலட்சியத்தாலும் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஈரானில் சாலை பாதுகாப்பு விதிகள் அலட்சியம் செய்யப்படுவது, மோசமான வாகனப் பராமரிப்பு போன்ற காரணங்களால் அங்கு சாலை விபத்துகளில் ஆண்டுதோறும் சுமாா் 17,000 உயிரிழந்துவருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →