50,000 ஆண்டுகள் பழமையான மாமூத் யானையின் உடல் 
உலகம்

50,000 ஆண்டுகள் பழமையான மாமூத் யானையின் உடல் கண்டெடுப்பு!

ரஷியாவில் கண்டெடுக்கப்பட்ட மாமூத் யானைக் குட்டியின் உடல்...

DIN

ரஷிய ஆய்வாளர்கள் 50,000 ஆண்டுகள் பழமையான மாமூத் யானையின் உடலை கண்டெடுத்துள்ளனர்.

சைபீரியாவில் உள்ள யாகுடியா பகுதியில் பெர்மாஃப்ரோஸ்ட் எனப்படும் உறைநிலையில் உள்ள இடத்தில் இருந்து 50,000 ஆண்டுகள் பழமையான மாமூத் யானைக் குட்டியின் உடலை ரஷிய ஆய்வாளர்கள் கண்டெடுத்தனர்.

இது பெண் யானை என்று அறியப்படும் நிலையில், இதற்கு ‘யானா’ என்று பெயர் சூட்டியுள்ளனர். உலகில் இதுவரைக் கண்டுபிடிக்கப்பட்ட மாமூத் யானை உடல்களில் இதுவே மிகச் சிறப்பாக பதப்படுத்தப்பட்ட நிலையில் இருந்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதற்கு முன்னர் 6 மாமூத் யானைகளின் உடல்கள் உலகம் முழுவதும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில், 5 ரஷியாவிலும், 1 கனடாவிலும் கண்டெடுக்கப்பட்டன.

தற்போது கண்டெடுக்கப்பட்ட யானையின் வயது 1 அல்லது சற்றே அதிகமாக இருக்கலாம் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

யாகுட்ஸ்க் பகுதியில் உள்ள ஃபெடரல் பல்கலையில் வைக்கப்பட்டுள்ள இந்த யானையின் உடல் 180 கிலோ (397 பவுண்டுகள்) எடையும்,120 சென்டிமீட்டர் (நான்கு அடி) உயரம் மற்றும் 200 சென்டிமீட்டர் நீளமும் கொண்டுள்ளது.

இவ்வளவு சிறப்பாக பதப்படுத்தப்பட்ட யானையின் உடல் தங்களை ஆச்சரியப்படுத்துவதாகக் கூறும் ஆய்வாளர்கள் இது ஒரு தனித்துவமான கண்டுபிடிப்பு என்று தெரிவித்தனர்.

மாமூத் யானையின் உடல் தோண்டியெடுக்கப்பட்ட படாகிகா ஆய்வு மையத்தின் அருகில் இதற்கு முன்னர் மிகப் பழமையான குதிரை, காட்டெருமை மற்றும் லெம்மிங் எனப்படும் எலியின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-வது அதிவேக சதம் விளாசிய ஹாரி ப்ரூக்; வெற்றியை நோக்கி இங்கிலாந்து!

புளிய மரத்தில் கார் மோதி விபத்து: 3 பேர் பலி, ஓட்டுநர் படுகாயம்

நீட் முதுநிலை தேர்வு எழுதியவர்களுக்கு எச்சரிக்கை!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் கல்லணைக் கால்வாய் நீரில் மூழ்கி பலி

சிர்கா பெயிண்ட்ஸ் லாபம் 39 சதவிகிதம் உயர்வு!

SCROLL FOR NEXT