66-வது கிராம்மி விருதுகள் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெற்றது.
94 பிரிவுகளில் இசைத் துறை கலைஞர்களுக்கான விருதுகள் அளிக்கப்பட்டன. அதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தாண்டுக்கான சிறந்த ஆல்பம் விருதுக்கு டெய்லர் ஸ்விப்டின் ‘மிட்நைட்ஸ்’ ஆல்பம் தேர்வு செய்யப்பட்டது.
அதே ஆல்பத்துக்காக சிறந்த பாப் பாடகிக்கான கிராம்மி விருதினையும் டெய்லர் பெற்றார்.
அமெரிக்க பாடகியும் இசை கலைஞருமான டெய்லர் ஸ்விப்ட், சிறந்த ஆல்பம் விருதினை நான்காவது முறையாக பெற்று அதிகபட்சமாக இந்த விருதினைப் பெற்ற இசை கலைஞர் என்கிற சாதனையைச் செய்துள்ளார். ஒட்டுமொத்தமாக இது இவரது 14-வது கிராம்மி விருது.
புதிய ஆல்பம் குறித்த அறிவிப்பையும் விழாவில் வெளியிட்டுள்ளார், டெய்லர் ஸ்விப்ட். ஏப்ரல் 19-ம் தேதி இவரின் ‘த டார்ச்சர்ட் பொயட்ஸ் டிபார்ட்மெண்ட்’ என்கிற ஆல்பம் வெளியாகவுள்ளது.
இதையும் படிக்க: சிலி காட்டுத்தீ: பலியானோர் எண்ணிக்கை 112ஆக அதிகரிப்பு
விருது குறித்து பேசும்போது, ”இந்த தருணம் என் வாழ்வின் சிறந்த தருணங்களில் ஒன்று. இதே மகிழ்ச்சியை நான் ஒரு பாடலை நிறைவு செய்யும்போதும் ஒரு இசை ஆல்பத்தை வெளியிடும்போதும் உணர்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.