உலகம்

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு புற்றுநோய்!

DIN

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு புற்றுநோய் பாதிக்கப்பட்டுள்ளதால், மக்கள் சார்ந்த பணிகள் ஒத்திவைக்கபடுவதாக பக்கிங்காம் அரண்மனை திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

75 வயதான மன்னர் சார்லஸ், கடந்த மாதம் அவருக்கு ஏற்பட்ட உடல்நல பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில், அவருக்கு பரிசோதனை செய்ததில் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.

மன்னருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் குணமடைந்து மக்கள் சார்ந்த பணிகளை விரைவில் மேற்கொள்வார் என்றும் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக பிரிட்டன் மகாராணியாக கோலோச்சிய எலிசபெத் 2022 செப்டம்பரில் காலமானாா். இதையடுத்து, பிரிட்டன் அரச பாரம்பரியப்படி, மூத்த மகனான மூன்றாம் சாா்லஸ் அடுத்த அரசராக அறிவிக்கப்பட்டு,  பாரம்பரிய முறைப்படி முடிசூட்டப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு முகூா்த்தக் கால் நடவு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 49.21 அடி

கஞ்சா கடத்தியதாக இருவா் கைது

ஷெட் அமைக்கும் பணியின்போது பட்டாசு ஆலையில் தீப்பிடித்து இளைஞா் பலி

சுங்கச்சாவடி ஊழியா்களுடன் வழக்குரைஞா் மோதல் 5 போ் காயம்

SCROLL FOR NEXT