முகப்பு
உலகம்

இஸ்ரேல் படை மீது தீவிரவாதி தாக்குதல்!

காஸாவின் மேற்குக் கடற்கரையில் உள்ள கிராமம் ஒன்றில் இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் மீது தீவிரவாதத் தாக்குதல் நடந்துள்ளது. 

Updated On : 8 பிப்ரவரி, 2024 at 4:03 PM
பகிர்:

மேற்குக் கடற்கரையின் வடக்குப்பகுதியில் உள்ள தெய்ர் ஷராஃப் கிராமத்தின் நுழைவு வாயிலைக் காவல்காத்து வந்த இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதி ஒருவர் தாக்குதல் நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

வியாழக்கிழமை காலை ஒரே ஒரு தீவிரவாதி நடத்திய இந்தத் தாக்குதலில் பாலஸ்தீன மக்கள் பலரும்கூட பாதிக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அந்த தீவிரவாதியைப் பிடித்திருப்பதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.  

பாதிக்கப்பட்ட பாலஸ்தீனர்களுக்கு ராணுவ மருத்துவர்கள் மூலமும் மேகன் டேவிட் அடோம் மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், இஸ்ரேல் படையினர் ஒருவரின் தலைக்கவசத்தில் குண்டு பாய்ந்ததாகவும், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்ததாகவும் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.