முகப்பு
உலகம்

டெய்லர் ஸ்விப்டின் காதல் பயணம் சாத்தியம்! ரசிகர்கள் பதிவு

காதலர் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள கடல்கள் தாண்டி பறக்கிறார் புகழ்பெற்ற பாடகி.

Updated On : 11 பிப்ரவரி, 2024 at 4:59 PM
டோக்கியோ நிகழ்வில் டெய்லரின் ரசிகைகள் | AP
பகிர்:

டெய்லர் ஸ்விப்ட், புகழ்பெற்ற அமெரிக்க பாடகி டோக்கியோவில் நடைபெற்றுவரும் அவரின் இசை நிகழ்வு சனிக்கிழமை இரவு நிறைவடையவுள்ளது. ரசிகர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பும் முன் டெய்லரின் அமெரிக்க பயணம் தொடங்கியிருக்கும்.

டெய்லரின் காதலர் டிரவிஸ் கெல்ஸ் விளையாடும் சூப்பர் பவுல் கால்பந்தாட்ட போட்டி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெறுகிறது. அதில் கலந்துகொள்ள பாடகியால் செல்ல முடியுமா என்பது தான் உலகம் முழுவதும் அவரது ரசிகர்கள் மத்தியில் பேச்சாக இருந்தது.

இப்போது அந்த பயணம் சாத்தியமாகவுள்ளதால் அவரது ரசிகர்கள் நெகிழ்ச்சியாக பதிவிட்டு வருகின்றனர்.

டிரவிஸ் கெல்ஸ் உடன் டெய்லர் ஸ்விப்ட் | AP

அமெரிக்காவில் உள்ள ஜப்பான் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில்  டெய்லரை சரியான நேரத்துக்கு ஜப்பான் அனுப்பி வைக்கும் என தெரிவித்தது வைரலானது.

ஸ்விப்டின் தனி விமானம் மாசுபாட்டை அதிகரிப்பது குறித்து சர்ச்சையும் எழுந்தது.

டோக்கியோ நிகழ்வில் பங்கேற்றோர் | AP

புதன்கிழமை டெய்லர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இந்த வாரம் குழப்பமிகுந்ததாக உள்ளது” எனப் பதிவிட்டிருந்தார்.

டெய்லர் தனது ஆதரவைக் காதலருக்கு வெளிப்படுத்த கடல்கள் தாண்டிச் செல்வது, அவரது ரசிகர்கள் தாண்டியும் உலக காதலர்களால் நெகிழ்ந்து பகிரப்பட்டு வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →