முகப்பு
தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதலுக்குப் பலியானவரின் உறவினர்கள்
உலகம்

இஸ்ரேலை எச்சரிக்கும் அமெரிக்கா!

காஸா மக்களுக்கான முறையான பாதுகாப்புத் திட்டங்கள் இல்லாமல் போர் நடவடிக்கையை விரிவாக்குவது ஆபத்தானது

உலகம்

இஸ்ரேலை எச்சரிக்கும் அமெரிக்கா!

காஸா மக்களுக்கான முறையான பாதுகாப்புத் திட்டங்கள் இல்லாமல் போர் நடவடிக்கையை விரிவாக்குவது ஆபத்தானது

Updated On : 16 பிப்ரவரி, 2024 at 10:32 AM
தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதலுக்குப் பலியானவரின் உறவினர்கள்
பகிர்:

காஸாவின் தெற்கு பகுதியான ராபா நகரத்தை நோக்கிய இஸ்ரேல் ராணுவத்தின் போர் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலை எச்சரித்துள்ளார்.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன் தொலைபேசி வழியாக உரையாடிய அமெரிக்க அதிபர், பொதுமக்களைப் பாதுகாக்க நம்பகமான மற்றும் பலனளிக்கக்கூடிய திட்டம் இல்லாமல் ராபா நோக்கி நகர்வது ஆபத்தானது என தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை காஸாவில் உள்ள மருத்துவமனைக்குள் தடாலடியாக நுழைந்த இஸ்ரேல் படைகள், ஹமாஸால் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கை எனத் தெரிவித்தது. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரழந்ததாகவும் 6 பேர் காயமுற்றதாகவும் காஸா அமைச்சகம் தெரிவித்தது.

போரில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

பிரதமர் நெதன்யாகு, இஸ்ரேல்- பாலஸ்தீன விவகாரத்தில் நீண்டகால தீர்வை எட்டும் நோக்கில் பன்னாட்டு அமைப்புகள் முன்மொழியும் அழைப்பைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →