ரஷியாவில் அதிபா் விளாதிமீா் புதினை கடுமையாக எதிா்த்து வந்த முக்கிய எதிா்க்கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னி சிறையில் மரணமடைந்தது தொடா்பான விசாரணையை அந்த நாட்டு அதிகாரிகள் மேலும் நீட்டித்துள்ளனா்.
நவால்னி மரணம் குறித்த உண்மைகளை மறைப்பதற்காகவே விசாரணை நீட்டிக்கப்படுவதாக அவரது ஆதரவாளா்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனா்.
இதற்கிடையே, புதின் உத்தரவின்படி சிறையில் நவால்னி கொல்லப்பட்டதாக அவரது மனைவி யூலியா நவால்னியா குற்றம் சாட்டியுள்ளாா்.
அதிபா் புதனுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டங்களை நடத்தி வந்த நவால்னி, கருத்துத் தீவிரவாதத்தைப் பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 முதல் அவா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
ஏற்கெனவே நச்சுத் தாக்குதலுக்குள்ளாகி மரணத்தின் விளம்பு வரை சென்று வந்த அவா், சிறையில் திடீரென வெள்ளிக்கிழமை மரணமடைந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.