எலான் மஸ்க் 
உலகம்

நோபல் பரிசுப் பட்டியலில் எலான் மஸ்க்?

அமைதிக்கான நோபல் பரிசுக்கு எலான் மஸ்க் பெயரைப் பரிந்துரைக்க நார்வே எம்.பி. கோரியுள்ளார்.

DIN

2024-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு எலான் மஸ்க் பெயரைப் பரிந்துரைக்க நார்வே நாடாளுமன்ற உறுப்பினரான மரியஸ் நில்சன் கோரிக்கை வைத்துள்ளார்.

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் சமூக வலைத்தளமான டிவிட்டரை 2022-இல் வாங்கி எக்ஸ் என பெயர்மாற்றம் செய்தார்.

சுதந்திர பேச்சை வெளிப்படுத்த இதனை செய்ததாக அவர் குறிப்பிட்டார். மேலும், ரஷியா- உக்ரைன் போரில் உக்ரைன் ராணுவத்துக்கு செயற்கைக்கோள்வழி தொடர்பினை அவரது நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்தது.

இவற்றுக்காக எலான் பெயரை நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கலாம் என மரியஸ் தெரிவித்ததாக பொலிட்கோ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது,

முற்போக்கு கட்சியை சேர்ந்த மரியஸ், வெளிப்படையான பேச்சு மற்றும் பல்வேறு தரப்பு வாதங்களையும் அனுமதிக்கும் எலான், டிவிட்டரை வாங்கி அதன் தணிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்ததாகவும் சுதந்திர கருத்துரிமையை ஊக்குவிக்கும் செயலில் ஈடுபடுவதால் எலான் அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தகுதியானவர் என மரியஸ் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய டிவிட்டர் நிர்வாகத்தில் முடக்கப்பட்டிருந்த முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்டவர்களின் கணக்குகள் எலான் பொறுப்பேற்ற பின் தளர்வாக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.87.53 ஆக நிறைவு!

கேஷுவல் லுக்.. ஈஷா ரெப்பா!

வாத்தி படத்துக்காக ஜி.வி. பிரகாஷுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது!

முதல் டெஸ்ட்: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!

தேசிய திரைப்பட விருதுகள்! சிறந்த தமிழ்ப்படம் உள்பட 3 விருதுகளுடன் பார்க்கிங் அசத்தல்!

SCROLL FOR NEXT