முகப்பு
உலகம்

குழந்தைகள், பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்: மனிதநேய அமைப்பு எச்சரிக்கை!

ஊட்டச்சத்து பற்றாக்குறை: காஸா பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதிப்பு

Updated On : 28 பிப்ரவரி, 2024 at 2:17 PM
இலவச உணவு பெறும் பாலஸ்தீனர்கள்
பகிர்:

காஸாவில் கருவுற்றிருக்கும் பெண்கள் குறை ஊட்டச்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக மனிதநேய அமைப்பு தெரிவித்துள்ளது.

காஸாவில் ஆரம்ப சுகாதார நிலையங்களை நடத்தி வரும் ப்ராஜெக்ட் ஹோப் அமைப்பு, கடந்த மூன்று மாதத்தில் சிகிச்சை மேற்கொண்ட கருவுற்ற பெண்களில் 21 சதவிகிதம் பேர் குறை ஊட்டச்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

சிறிய பாலஸ்தீன பிராந்தியத்தின் 23 லட்சம் மக்களும் நெரிசல் மிகுந்த பகுதிக்கு போரால் தள்ளப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு பெரும்பாலும் ரொட்டியே உணவாக இருக்கிறது.

பழங்கள், காய்கறிகள் போன்ற ஊட்டச்சத்து நிரம்பிய பொருள்கள் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் அதிக விலை கொண்டதாகவும் உள்ளதாக அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

போதிய ஊட்டச்சத்து கிடைக்காதது பிறக்கும் குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் அதிக ஆபத்தானது என அமைப்பு எச்சரிக்கிறது.

காஸாவுக்குள் நுழையும் வாழ்வாதார பொருள்கள் போதிய அளவில் இல்லை. இஸ்ரேல் பொருள்கள் ஏற்றிவரும் டிரக்குகளைத் தாங்கள் தடுப்பதில்லை என்று வாதிடுகிறது.

சிதைந்த காஸாவில் பொருள்கள் பகிர்மானம் செய்வதில் மனிதநேய அமைப்புகளும் ஐநாவும் ஆங்காங்கே நடக்கும் போர்கள், சட ஒழுங்கின்மையால் சிக்கலை எதிர்கொள்கின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →