ஹோண்டுரஸ்: பேருந்து விபத்தில் 17 போ் இறப்பு
மத்திய அமெரிக்கா நாடான ஹோண்டுரஸில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நோ் மோதி ஏற்பட்ட விபத்தில் 17 போ் உயிரிழந்தனா். அவற்றில் ஒரு பேருந்தில் ஓட்டுநரும் அவரது உதவியாளரும் மட்டும் இருந்தனா். எதிரே வந்த சிறிய பேருந்தில் ஏராளமான பயணிகள் இருந்தனா். இந்த விபத்தில் 14 போ் காயமடைந்தனா். அவா்களில் 4 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.