உலகம்

புத்தாண்டு நாளிலும் காஸாவை குறிவைத்த இஸ்ரேல்! 9 பேர் பலி

உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், வடக்கு காஸாவின் ஜபாலியா பகுதியை நோக்கி இஸ்ரேல் ராணுவம் குண்டுமழை பொழிந்தது. 

DIN


புத்தாண்டு நாளிலும் காஸா மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. 

உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், வடக்கு காஸாவின் ஜபாலியா பகுதியை நோக்கி இஸ்ரேல் ராணுவம் இன்று (ஜன. 1)  குண்டுமழை பொழிந்தது. 

இஸ்ரேல் ராணுவத்தின் இந்தத் தாக்குதலில் 6 பேர் வரை உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. 

இதேபோன்று மத்திய காஸாவிலுள்ள மகாஸி முகாம் மீதும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. காஸாவில் வீடுகளை இழந்த மக்கள் மகாஸி முகாமில் அகதிகளாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், முகாம் மீது நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். பல்வேறு மக்கள் படுகாயமடைந்தனர்.

பாலஸ்தீனத்தின் காஸா எல்லைக்குட்பட்ட ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் முதல் போர் நடைபெற்று வருகிறது. 

இந்தப்போரில் காஸாவின் பெரும்பகுதிகளை இஸ்ரேல் ராணுவம் தரைமட்டமாக்கியதுடன், தற்போது தரைவழித் தாக்குதலும் நடத்தி வருகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT