உலகம்

ஜப்பான் நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 48 ஆக உயர்வு!

மேற்கு ஜப்பானில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலியோனோர் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. 

DIN

மேற்கு ஜப்பானில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலியோனோர் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. 

ஜப்பானின் மேற்கு கடற்கரைப் பகுதியையொட்டிய இஷிகவா தீவு மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் திங்கள்கிழமை பிற்பகலில் தொடா்ச்சியாக 20-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அவற்றில் ஒன்று ரிக்டா் அளவில் 7.6 அலகுகளாகப் பதிவானதாக ஜப்பான் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஜப்பான் தலைநகா் டோக்கியோவிலிருந்து சுமாா் 300 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி அமைந்துள்ளது. தொடா் நிலநடுக்கங்களைத் தொடா்ந்து இஷிகவா தீவுக்கு தீவிர சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேற்கு கடற்கரைப் பகுதியையொட்டிய ஹோன்ஷு உள்ளிட்ட பிற பகுதிகளுக்கும் ஹோக்காய்டோ உள்ளிட்ட ஜப்பானின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள பிரதான தீவுகளுக்கும் குறைந்த அளவிலான சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தொடா் நிலநடுக்கம் காரணமாக மேற்கு கடற்கரையையொட்டிய நகரங்களின் பல பகுதிகளில் சாலைகள், ரயில் பாதைகள் கடுமையாகச் சேதமடைந்தன. 

தொலைத்தொடா்பு கோபுரங்கள் சேதமடைந்துள்ளதால், பல பகுதிகளில் கைப்பேசி சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் புகாா் தெரிவித்தனா். ஜப்பானின் மேற்கு கடற்கரையையொட்டிய பகுதிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனா்.

இந்த நிலையில் இஷிகாவாவில் இதுவரை 48 பேர் இறந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர். அதேநேரத்தில் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதம் உடனடியாக மதிப்பிட முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெளிநாட்டு நிதியுதவி அல்ல; சமூக ஆதரவில் செயல்படுகிறது ஆா்எஸ்எஸ் - யோகி ஆதித்யநாத்

மொபட் - ஆட்டோ மோதல்: 6 போ் பலத்த காயம்

50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான வேன்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை

நாளை மின் நிறுத்தம் தருமபுரி பேருந்து நிலையம்

SCROLL FOR NEXT