உலகம்

இன்று... சூரியனுக்கு மிக அருகில் பூமி!

2024ஆம் ஆண்டில் சூரியனுக்கு மிக அருகில் பூமி இருக்கும் நிகழ்வு இன்று நடைபெறவுள்ளது.

DIN

2024ஆம் ஆண்டில் சூரியனுக்கு மிக அருகில் பூமி இருக்கும் நிகழ்வு இன்று நடைபெறவுள்ளது.

சூரியனை நீள்வட்டப் பாதையில் பூமி சுற்றி வருவதால், குறைந்த விட்டமுடைய வட்டப்பாதையில் பூமி பயணிக்கும்போது பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரம் குறைந்து மிக அருகில் சூரியன் தென்படும். இதனை பெரிஹேலியன் தினம் என அறிவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். 

பெரிஹேலியன் நாள் என்பது வருடாந்திர  சுற்றுப்பாதையில் சூரியனுக்கு மிக அருகில் பூமி இருக்கும் தருணத்தைக் குறிக்கிறது. 

இந்த அரிய நிகழ்வு ஜன. 3ஆம் தேதி (இன்று) நடைபெறுகிறது. இந்த நிகழ்வின்போது மற்ற நாள்களில் இருக்கும் தூரத்தைக் காட்டிலும் சூரியன் - பூமிக்கு இடையே 3 மில்லியன் மைல் தொலைவு குறைவாக இருக்கும். 

பூமி சூரியனை முழுவதும் சுற்றிமுடிக்க ஓராண்டு ஆகும். ஆனால், ஆண்டுதோறும் இதே நாளில் பெரிஹேலியன் நாள் வராது. அதாவது ஆண்டுதோறும் இதே நாளில் சூரியனுக்கு மிக அருகில் பூமி வராது. மாறாக ஓரிரு வார வித்தியாசங்களில்  பெரிஹேலியன் நாள் நிகழக்கூடும் என அறியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இயந்திரங்கள் கொள்முதல் செய்ய ஜவுளி நிறுவனங்களுக்கு 20% மானியம்! - முதல்வர் அறிவிப்பு

ரூ. 822.70 கோடியில் அமையவுள்ள பிராட்வே பேருந்து நிலையத்தின் சிறப்பம்சங்கள்!

முதல் டி20: டிராவிஸ் ஹெட் கேப்டன்; மூன்று அறிமுக வீரர்களை களமிறக்கும் ஆஸி.!

மக்களிடம் கருத்து கேட்க தவெக தேர்தல் அறிக்கைக் குழு சுற்றுப்பயணம்!

உ.பி.யில் பிப்.9 முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்: பிப்.11ல் பட்ஜெட் தாக்கல்!

SCROLL FOR NEXT