உலகம்

ஜப்பான் நிலநடுக்கம்: உயிரிழப்பு 82-ஆக உயர்வு!

DIN

ஜப்பான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது. 

இஷிகாவா தீவுக்கு அருகே ஜப்பான் கடல் பகுதியில் திங்கள்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.6 அலகுகளாகப் பதிவானது. இதனால் அந்த மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகள், வணிகக் கட்டடங்கள் குலுங்கின. அதன் பிறகும், தொடா்ச்சியாக 20-க்கும் மேற்பட்ட முறை சிறிய அளவிலான நிலநடுக்கங்களும், நில அதிா்வுகளும் தொடா்ந்தன.

தொடா் நிலநடுக்கங்களைத் தொடா்ந்து இஷிகவா மாகாணத்துக்கு தீவிர சுனாமி எச்சரிக்கையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு குறைந்த அளவிலான சுனாமி எச்சரிக்கையும் ஜப்பான் அரசு விடுத்தது. கடற்கரைக்கு அருகே அமைந்துள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி, பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு ஜப்பான் அரசு எச்சரித்தது.

இந்த நிலையில், நிலநடுக்கத்தால் சேதமடைந்த கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 82-ஆக உயா்ந்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை கூறினா். இது தவிர, பலர் காயமடைந்துள்ளதாகவும், சுமாா் 51 போ் மாயமாகியுள்ளதாகவும் அவா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பாகுபாடு: அகிலேஷ்

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மே 24 வரை விண்ணப்பிக்கலாம்

தாமதமானாலும் வாக்கு செலுத்தாமல் வீடு திரும்பாதீர்கள்: உத்தவ் தாக்கரே கோரிக்கை

மம்தா பானர்ஜியின் சகோதரர் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை!

5-ஆம் கட்ட தேர்தல்: ஜனநாயகக் கடமையாற்றிய சாமானிய மக்கள்!

SCROLL FOR NEXT