கலிபோர்னியாவில் உள்ள இந்து ஆலயத்தின் மீது இந்தியாவுக்கு எதிரான முழக்கங்களை காலிஸ்தான் ஆதரவாளர்கள் கிறுக்கியுள்ளனர்.
கிராஃபிடி என அழைக்கப்படும் சுவரெழுத்து முறையில் ஹேவார்டில் உள்ள ஷேரவாலி கோயிலை நாசப்படுத்தியுள்ளதாக இந்து அமெரிக்க அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
சில வாரங்களுக்கு முன்னால் நெவார்க்கில் உள்ள சுவாமிநாராயணன் மந்திர் இந்து ஆலயத்தில் இவ்வாறு கிறுக்கப்பட்டது.
அதே பகுதியில் உள்ள சிவதுர்கா ஆலயத்தில் திருட்டு சம்பவமும் ஒரு வாரத்திற்கு முன்பு நிகழ்ந்துள்ளதாக அறக்கட்டளை தெரிவிக்கிறது.
அமெரிக்காவின் காவல்துறையையும் குடியுரிமை பிரிவையும் அறக்கட்டளை அணுகியுள்ளதாக அதன் எக்ஸ் தளப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆலயங்களில் எப்போதும் இயங்குகிற சிசிடிவி கேமராக்களைப் பொருத்தவும் எச்சரிக்கை ஒலிப்பான்களை அமைக்கவும் அறக்கட்டளை கோயில் நிர்வாகங்களிடம் கோரியுள்ளது.
டிச.23 சுவாமிநாராயணன் ஆலயத்தை நாசப்படுத்தியதற்கு அமெரிக்க உள்துறை தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: வடகொரியா- தென்கொரியா மூளும் போர்?
இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையைக் கேட்டுக் கொண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.