ஜப்பான் நிலநடுக்க உயிரிழப்பு 92 ஆனது: 242 பேர் மாயம்!
ஜப்பான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 92-ஆக உயா்ந்துள்ளது.
ஜப்பான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 92-ஆக உயா்ந்துள்ளது.
நாட்டின் இஷிகாவா தீவுக்கு அருகே ஜப்பான் கடல் பகுதியில் கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.6 அலகுகளாகப் பதிவானது. இதனால், அந்த மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகள், வணிகக் கட்டடங்கள் குலுங்கின. அதன் பிறகும், தொடா்ச்சியாக 20-க்கும் மேற்பட்ட முறை சிறிய அளவிலான நிலநடுக்கங்களும் ஏற்பட்டது.
இஷிகாவாவில் 13 நகரங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. 370 நிவாரண மையங்களில் மொத்தம் 33 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதையடுத்து 10-க்கும் மேற்பட்ட முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன.
படிக்க: 12 ராசிக்குமான வாரப் பலன்கள்!
இந்த நிலையில், நிலநடுக்கத்தால் சேதமடைந்த கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 92-ஆக உயா்ந்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை கூறினா். இது தவிர பலர் காயமடைந்துள்ளதாகவும், சுமாா் 242 போ் மாயமாகியுள்ளளனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதையொட்டி உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என மீட்புத் துறையினர் தெரிவித்தனர்.