மாலத்தீவு 
உலகம்

இந்தியர்களைச் சகோதரர்களாகக் கருதுகிறோம்: மாலத்தீவு கூட்டமைப்பு

மாலத்தீவின் பயண முகவர்கள் மற்றும் சுற்றுலா ஏற்பட்டாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

DIN

இந்திய பிரதமர் குறித்தும் இந்திய மக்கள் குறித்தும் மாலத்தீவு இணை அமைச்சர்கள் வெளிப்படுத்திய கருத்தை முன்னிட்டு இந்தியா- மாலத்தீவு இடையேயான ராஜ்ய உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும்பொருட்டு முதன்மை பயண ஏற்பாட்டு நிறுவனமான ஈஸ்மைடிரிப் மாலத்தீவுக்கான தனது பயணச்சேவைகளை ரத்து செய்தது.

இந்த நிலையில், மாலத்தீவின் பயண முகவர்கள் மற்றும் சுற்றுலா ஏற்பட்டாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் அந்த நிறுவனத்துக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் தங்களின் ஆத்மார்த்தமான மன்னிப்பை வெளிபடுத்தியுள்ள கூட்டமைப்பு இதனால் மாலத்தீவு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைக் குறிப்பிட்டுள்ளது.

மாலத்தீவின் உள்நாட்டு உற்பத்தில் மூன்றில் இரண்டு பங்கு சுற்றுலா மூலமாக ஈட்டக்கூடிய வருவாய்தான். இந்தியாவிலிருந்து ஆண்டுக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மாலத்தீவுக்குச் சுற்றுலா செல்வதாகவும் கரோனா பேரிடரின்போது கூட சுற்றலாவை அனுமதித்த நாடாக மாலத்தீவு இருந்ததையும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

44 ஆயிரத்துக்கும் மக்கள் இந்தத் துறையை நம்பியிருப்பதாகக் குறிப்பிடும் கூட்டமைப்பு, இந்தியர்களை நாங்கள் வாடிக்கையாளர்களாக பார்க்கவில்லை, சகோதரர்களாக பார்க்கிறோம் எனத் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குளித்தலை பகுதியில் தொடா் மழை நீரில் மூழ்கி அழுகும் நெற்பயிா்கள்: நிவாரணத்தை எதிா்நோக்கியிருக்கும் விவசாயிகள்

போலி ஆவணங்கள்: வெளிநாடு செல்ல முயன்ற நபா் கைது

பள்ளியில் மயங்கி விழுந்த மாணவன் உயிரிழப்பு

தோ்தல் புறக்கணிப்பு சுவரொட்டி ஒட்டியவா்கள் மீது நடவடிக்கை தேவை

நாகையில் அக்.10-இல் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

SCROLL FOR NEXT