கண்ணாடி வடிவில் தொலைக்காட்சி, எல்ஜி-யின் புதிய தொழில்நுட்பம்!
பார்ப்பதற்கு கண்ணாடியைப் போல இருக்கும் தொலைக்காட்சியை எல்ஜி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகின் முதல் கம்பியிணைப்பற்ற கண்ணாடி போன்ற தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தியுள்ளது எல்ஜி நிறுவனம்.
டிரான்ஸ்பரண்ட் ஓஎல்இடி சிக்னேஜ் (Transparent OLED Signage) எனும் இந்தத் தொலைக்காட்சி சராசரியான தொலைகாட்சியைப் போலல்லாமல், அதன் திரை, ஒளி ஊடுருவும் கண்ணாடிகளைக் கொண்டுள்ளது.
அதாவது, இந்த தொலைக்காட்சியின் பின்னால் உள்ள பொருள்களையும் உங்களால் திரையில் காணமுடியும் என்கிறது எல்ஜி நிறுவனம். உதாரணமாக கார் கண்ணாடியில் இந்த தொழில்நுட்பத்தைப் பொறுத்தினால், சாலை மற்றும் காணொலி இரண்டையும் கார் கண்ணாடியில் பார்க்கலாம்.
Advertisement
Advertisement
நடக்கவிருக்கும் சிஇஎஸ் 2024-ல் தனது புதிய தொலைக்காட்சியைக் காட்சிப்படுத்தவுள்ளதாக எல்ஜி தெரிவித்துள்ளது. இந்த ஆண்டுக்குள் தனது புதிய தொழில்நுட்பத்தை சந்தைக்கு அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: நிலவுக்கு ஆய்வுக் கலம் அனுப்பியது அமெரிக்கா
இந்த தொலைக்காட்சி 38% ஒளி ஊடுருவும் திறன் (transparency) கொண்டது என எல்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தத் தொலைக்காட்சிக்கு கம்பியிணைப்புகள் கிடையாது எனத் தெரிவித்துள்ளது.
தொலைக்காட்சியுடன் வழங்கப்படும் சீரோ கனெக்ட் பாக்ஸ் (Zero Connect Box) மூலம் காணொலிகள் மற்றும் ஒலிகள் பரிமாற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்ணாடி போல செயல்படும் இந்தத் திரையை சாதாரண திரைபோலவும் மாற்றிக்கொள்ளும் வசதி இந்தத் தொலைக்காட்சியில் உள்ளது.
இந்தத் தொலைக்காட்சி மற்ற தொலைக்காட்சிகளை விட 70% அதிக காணொலி கிராபிக்ஸ் திறனையும், 30% அதிக செயல்பாட்டுத் திறனையும் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எப்போது சந்தைக்கு வரும்? ஆரம்ப விலை? போன்ற தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.