உலகம்

மேற்குக் கரையில் இஸ்ரேல்- பாலஸ்தீனர்கள் மோதல்: 3 பேர் பலி

DIN

ஜெருசலேம்: மேற்குக் கரையில் இஸ்ரேல் ஆளுகையில் உள்ள பகுதியில் ஊடுருவி ராணுவ வீரர்களைத் தாக்க முயன்ற 3 பாலஸ்தீனர்களை சுட்டுக் கொன்றதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

அதோரா பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த வீரர்கள் மீது பாலஸ்தீனர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அதற்கு பதிலடிகொடுத்த போது 3 பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.

தாக்குதலில் ஈடுபட்ட 34 வயதான பாலஸ்தீனர் காலில் காயம் ஏற்பட்டதாக இஸ்ரேல் மீட்புப் படை தெரிவித்துள்ளது. மேலதிக விபரங்களை வெளியிடவில்லை.

இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர், 100-வது நாளைத் தொடவுள்ள  நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதையும் படிக்க: தைவானில் இன்று தோ்தல்

மேற்குக் கரைப் பகுதியில் இதுவரை 344 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இஸ்ரேல் இனியும் தாமதிக்கக் கூடாது : பிணைக்கைதிகளின் குடும்பத்தினர் கோரிக்கை!

சர்வாதிகார அரசை அகற்றுவதே குறிக்கோள்: காங்கிரஸ்

ராணுவ அதிகாரிப் பணிக்கான என்டிஏ தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு

அமெரிக்க உளவு செயற்கைக் கோள்களை வானில் ஏவிய ஸ்பேஸ்எக்ஸ்!

அமெரிக்காவில் மேலும் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல்!

SCROLL FOR NEXT