கோப்புப்படம். 
உலகம்

பாகிஸ்தானில் நிம்மோனியாவால் 18 குழந்தைகள் பலி!

பாகிஸ்தானில் பஞ்சாப் பகுதியில் நிம்மோனியாவால் பாதிக்கப்பட்ட 18 குழந்தைகள் பலியாகியுள்ளனர். 

DIN

பாகிஸ்தான் ஆளுகைக்கு உட்பட்ட பஞ்சாப்பில் கடும் குளிர் காரணமாக 18 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடும்குளிர் நிலவி வருவதால் குழந்தைகள் நிமோனியாவினால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுவரை 1062 பேர் நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் பெரும்பான்மையானவர்கள் லஹோரைச் சேர்ந்தவர்கள் எனவும் மருத்துவத்துறையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. லஹோர் பகுதியில் ஜனவரியில் மட்டும் 780 பேர் நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மொத்த பஞ்சாப்பில் 4900 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கு நிமோனியா ஏற்படுவதைத் தவிர்க்க பள்ளிகளுக்கு ஜனவரி 31 வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

மேலும், ஆப்கானிஸ்தானில் நிமோனியாவால் இந்த வருடத்தில் மட்டும் 2300 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். நிமோனியா நோயால் அதிக உயிரிழப்புகளைச் சந்திக்கும் நாடுகளில் ஆப்கானிஸ்தானும் உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 7 போ் கைது

நவராத்திரியில் உச்சம் தொட்ட வாகன, வீட்டு உபயோக பொருள்கள் விற்பனை!

இந்தோனேசிய பள்ளி கட்டட விபத்து: உயிரிழப்பு 14-ஆக உயா்வு

பிரிட்டன் யூத ஆலயத் தாக்குதல்: 6 பேரிடம் விசாரணை

மின்னணு பயண அனுமதி: கட்டாயமாக்கியது இலங்கை

SCROLL FOR NEXT