உலகம்

பாகிஸ்தான்: போலியோ தடுப்பு திட்ட மருத்துவர் பலி

DIN

பாகிஸ்தானில் போலியோ நோய்த்தடுப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் போலியோ மருத்துவர் மற்றும் காவலர் பயணித்த வாகனம் தாக்கப்பட்டுள்ளது.

மருத்துவர் அப்துர் ரஹ்மான், மாவட்ட மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் வழியில் முகமறியாத கொலைக்காரர்கள் அவரைச் சுடத் தொடங்கியுள்ளனர்.

அவசர உதவி வாகனம், காயம்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளித்தது. மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட மருத்துவர் சிகிச்சை பலனின்றி உயிழந்தார்.

பாதுகாப்புக்கு உடன் பயணித்த காவலரும் தாக்கப்பட்டுள்ளார். அவர் திவீர சிகிச்சை பிரிவில் உள்ளார். 

பஜார் பழங்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் தரையில் பதிக்கப்பட்ட குண்டு வெடித்ததில் இருவர் பலியாகினர்.

போலியா மருத்துவர் உள்பட 7 காவலர்கள் அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த தாக்குதலில் பலியாகினர். அந்தத் தாக்குதலில் 20-க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றனர்.

2012 முதல் இதுவரை போலியோ தொடர்புடைய 109 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மதம் சார்ந்த நம்பிக்கையின்பேரில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பகுதியில் போலியோ திட்ட பணியாளர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT