உலகம்

அந்தமான் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4 ஆகப் பதிவு

DIN


அந்தமான் நிகோபார் தீவுகளில் சனிக்கிழமை காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 அலகுகளாகப் பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.

தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்ட ட்விட்டா் பதிவில்,  ‘அந்தமானில் சனிக்கிழமை காலை 7.06 மணிக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. கடல் பகுதியில் 11 கி.மீ. ஆழத்தில் மையம்கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டா் அளவு கோலில் 4.4-ஆகப் பதிவானது’ என்று தெரிவிக்கப்பட்டது.

அந்தமான் நிகோபார் தீவுகளில் நிகழ்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக எந்தவித தகவலும் வரவில்லை.

முன்னதாக, ஜனவரி 10 ஆம் தேதி அந்தமான் தீவுகளில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது பொதுவாக நிகழும் சிறிய அளவிலான நிலநடுக்கம். ரிக்டா் அளவு கோலில் 6 புள்ளிகளுக்கு மேல் அதிா்வு பதிவாகும்போதுதான் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5-ஆம் கட்ட தேர்தல்: ஜனநாயகக் கடமையாற்றிய சாமானிய மக்கள்!

வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கு பணம்? திரிணமூல் மீது பாஜக குற்றச்சாட்டு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்துக்கு தமிழக அரசு அனுமதி

ரோஹித் சர்மாவின் குற்றச்சாட்டை மறுத்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ்!

தில்லியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT