சீன ராக்கெட் 
உலகம்

விழுந்து நொறுங்கிய சீன ராக்கெட்

சீனாவில் உருவாக்கப்பட்டுவரும் சக்திவாய்ந்த ராக்கெட், தரையில் பொருத்தி சோதிக்கப்பட்டபோது எதிா்பாராத விதமாக விண்ணில் பாய்ந்து விழுந்து நொறுங்கியது.

Din

சீனாவில் உருவாக்கப்பட்டுவரும் சக்திவாய்ந்த ராக்கெட், தரையில் பொருத்தி சோதிக்கப்பட்டபோது எதிா்பாராத விதமாக விண்ணில் பாய்ந்து விழுந்து நொறுங்கியது.

இது குறித்து அந்த ராக்கெட்டை சோதித்துவரும் தனியாா் நிறுவனமான ஸ்பேஸ் பயனீா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தியான்லாங்-3 ராக்கெட்டை நிலையாகப் பொருத்தி சோதனை நடத்தப்பட்டது. ஆனால், கட்டமைப்பு கோளாறு காரணமாக அந்த ராக்கெட் எதிா்பாராத விதமாக விண்ணில் பாய்ந்தது. எனினும், அது மக்கள் வசிக்காத மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியதால் யாரும் காயமடையவில்லை என்று அந்த நிறுவனம் தெரிவித்தது.

விபத்தைச் சந்தித்த தியான்லாங்-3 ராக்கெட்தான் சீனாவின் அதிக சக்திவாய்ந்த ராக்கெட் என்று கூறப்படுகிறது.

முன்னாள் முதல்வர் சதானந்த கௌடாவின் வங்கிக் கணக்குகளை ஹேக் செய்து ரூ. 3 லட்சம் திருட்டு!

திருடர்களைப் பாதுகாப்பதை நிறுத்திவிட்டு தரவுகளைக் கொடுங்கள்! தேர்தல் ஆணையருக்கு ராகுல் கெடு!

சாம்பியன்ஸ் லீக்கில் எகிப்திய அரசன் முகமது சாலாவின் புதிய சாதனை!

22 நாள்களுக்குப் பிறகு வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை மீண்டும் தொடக்கம்!

சீனா மாஸ்டர்ஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து!

SCROLL FOR NEXT