முகப்பு
உலகம்

உரிமையாளரைவிட ஊழியருக்கு அதிக ஊதியம்!

மைக்ரோசாப்ட்டின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் பால்மரின் நிகர சொத்துமதிப்பு பில்கேட்ஸை விட உயர்வு

Updated On : 2 ஜூலை, 2024 at 9:40 AM
கோப்புப் படம்
பகிர்:

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் பால்மரின் நிகர சொத்துமதிப்பு, அந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் பில்கேட்ஸை விட உயர்ந்துள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் ஓபன்ஏஐ என்னும் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கொண்டதன் மூலம், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த ஆண்டு பங்கு 21% அதிகரித்துள்ளது. இதன் மூலம் மைக்ரோசாப்ட் நிறுவன பங்குதாரர்கள் பெரும் லாபம் அடைந்துள்ளனர்.

இதனையடுத்து, `மைக்ரோசாப்ட் நிறுவன பங்குதாரரான ஸ்டீவ் பால்மர் 157.2 பில்லியன் டாலர் மதிப்பிலான நிகர மதிப்பினைப் பெற்றுள்ளார்’ என்று ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இணையதளத்தில் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் 156.7 பில்லியன் டாலர் மட்டுமே கொண்டுள்ளார்.

மைக்ரோசாப்ட் நிறுவனம் 1975ஆம் ஆண்டில் பில்கேட்ஸ் மற்றும் பால் ஆலன் ஆகிய இருவரால் நிறுவப்பட்டது. பில்கேர்ஸ் 2000ஆம் ஆண்டு வரையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை வழிநடத்தினார். பின்னர், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஆரம்ப காலங்களில் இருந்து பணியாற்றி வந்த ஸ்டீவ் பால்மர் என்பவரை தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்த பில்கேட்ஸ், அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வந்த ஸ்டீவ் பால்மர் 2014ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றதுடன், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மிகப்பெரும் பங்குதாரராகவும் மாறினார். அதாவது, ஸ்டீவ் பால்மர் தற்போதைய நிகர சொத்துமதிப்பில் 90%-க்கும் அதிகமானவை மைக்ரோசாப்ட் பங்குகளில் தான் உள்ளன. ஆனால், பில்கேட்ஸ் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஸ்டீவ் பால்மரை விட குறைவான பங்குகளையே வைத்துள்ளார்.

இதன் மூலம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில்கேட்ஸை விட, அந்த நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான ஸ்டீவ் பால்மரின் சொத்துமதிப்பு அதிகமாகி உள்ளது.

பில்கேட்ஸ், அவருடைய முன்னாள் மனைவி மெலிண்டா பிரெஞ்சு கேட்ஸ் மற்றும் வாரன் பஃபெட் ஆகிய மூவரும் இணைந்து உலகின் மிகப்பெரிய தொண்டு நிறுவனங்களையும் உருவாக்கியுள்ளனர். தொழிலதிபர்கள் தங்கள் செல்வத்தின் பெரும்பகுதியைக் தொண்டுகளில் வழங்க ஊக்குவிப்பதற்காக தொண்டு நிறுவனங்களை நிறுவினர். ஆனால் தொண்டு நிறுவன உறுதிமொழியில் ஸ்டீவ் பால்மர் பங்கேற்கவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →