உலகம்

நகைச்சுவை செய்தது குற்றமா? பிலிப்பின்ஸில் ஆஸ்திரேலியர் கைது!

பிலிப்பின்ஸ் விமான நிலையத்தில் நகைச்சுவை செய்த ஆஸ்திரேலியர் கைது

DIN

தெற்கு பிலிப்பின்ஸில் உள்ள சம்போங்கா டெல் நார்ட் பகுதியில் உள்ள விமான நிலையத்தில் சோதனையின்போது வெடிகுண்டு குறித்து நகைச்சுவை செய்த ஆஸ்திரேலியரை பிலிப்பின்ஸ் காவல் துறை கைது செய்துள்ளது.

ஜிஎம்ஏ நியூஸ் அளிக்கும் தகவலின்படி, தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பின்ஸில் 69 வயதான ஆஸ்திரேலிய குடிமகன் புதன்கிழமை டெல் நார்ட் விமான நிலைய சோதனையில் அதிகாரியின் கேள்விக்கு நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.

‘உங்கள் பையில் எலெக்ட்ரானிக் கருவிகள் உள்ளனவா’ என்கிற அதிகாரியின் கேள்விக்கு, ‘இல்லை, அணுகுண்டு மட்டுமே இருக்கிறது’ என அவர் தெரிவித்தது பிலிப்பின்ஸ் நாட்டின் சட்டத்திற்கு எதிரானது எனக் கூறப்படுகிறது.

அவரது பையில் எந்தவித குண்டும் இல்லை. இருந்தபோதும் வெடிபொருள், குண்டுகள் மற்றும் வன்முறை கருவிகள் குறித்த நகைச்சுவைக்கு பிலிப்பின்ஸில் தடுப்பு சட்டம் உள்ளது.

2023-ல் எட்டு வெடிகுண்டு நகைச்சுவைகள் இந்த சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன மற்றும் 2024 ஜனவரியில் விமான நிலையத்தில் மூன்று நிகழ்வுகள் நடந்துள்ளன.

மே மாதத்தில் பிலிப்பின்ஸ் குடியுரிமை ஆணையம், வெளிநாட்டவர்கள் வெடிகுண்டு குறித்து நகைச்சுவை செய்தால் நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவதில் சிக்கல் நேரும் எனவும் நாட்டை விட்டு வெளியே அனுப்பப்படுவார்கள் எனவும் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உளுந்து, பச்சைப் பயறுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயம்: தமிழக அரசு உத்தரவு

கணக்குப்பதிவியல், வணிகவியல் பாடங்களில் சிறப்புக் கவனம் தேவை: பள்ளிக் கல்வித் துறை

முப்படை தலைமைத் தளபதியின் பதவிக்காலம் 8 மாதங்களுக்கு நீட்டிப்பு

ஜம்மு - காஷ்மீா்: பஹல்காம் பயங்கரவாதிகளுக்கு உதவியவா் கைது

இளைஞரைத் தாக்கி வழிப்பறி: 4 போ் கைது

SCROLL FOR NEXT