தலிபான் அமைச்சகத்தின் ஆளுகையில் ஆப்கன் மக்கள் அச்சத்தில் உள்ளதாக செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் அவையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தலிபான் கொள்கைகளை நிறைவேற்ற பின்பற்றப்படும் சில முறைகள் மனித உரிமையை மீறுவதாகவும் அடிப்படை சுதந்திரத்தை கேள்விக்குட்படுத்துவதாகவும் உள்ளது என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
2021-ல் ஆப்கானிஸ்தான் நாட்டின் ஆட்சியை தலிபான் ஆயுத படையினர் கைப்பற்றினர். அதுமுதல் பெண்கள், பெண் குழந்தைகளின் மீதான பல்வேறு கட்டுபாடுகளை அமைச்சகம் விதித்துள்ளது. அவர்களின் ஆடை சுதந்திரம், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் அமைச்சகம் தலையிடுவது உலகம் முழுவதும் எதிர்ப்பலைகளை உருவாக்கியது.
இந்த கட்டுபாடுகளை பின்பற்றாதவர்கள் மீது அமைச்சகம் விதிக்கும் தண்டனைகள் தன்னிச்சையாகவும் கடுமையாகவும் பொருத்தமற்றதாகவும் இருப்பதாக அறிக்கை குற்றம் சாட்டுகிறது.
மேலும், பெண்கள் மீது பாரபட்சமான தடைகளை விதிக்கும் வகையில் கட்டுபாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மனித உரிமை மீறல்கள், எதிர்பாராத கட்டுபாட்டு அளவீடுகள் ஆகியவை மக்கள் மத்தியில் பயத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 2021 முதல் மார்ச் 2024-க்குள் அமைச்சகம் கொண்டுவந்த கட்டுபாடுகளை நடைமுறைப்படுத்துவதில் தலிபான்கள் கையாண்ட - தனிநபர் சுதந்திரம், உடல் மற்றும் மன ரீதியான ஒருங்கிணைப்பை உருக்குலைக்கும் வகையிலான- நிகழ்வுகளின் எண்ணிக்கை 1,033 என ஐநா அறிக்கை தெரிவிக்கிறது.
பொய்யான மற்றும் முரண்பாடான குற்றச்சாடுகளை ஐநா அடுக்குவதாக குறிப்பிட்டு இந்த அறிக்கையை தலிபான் அமைச்சகம் புறக்கணித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.