செளதி ஏர்லைன்ஸ் விமானம் மற்றும் தீ பற்றிய சக்கரம் எக்ஸ் பக்கம்
உலகம்

தீப்பற்றிய செளதி ஏர்லைன்ஸ் விமானம்: துரித நடவடிக்கையால் விபத்து தவிர்ப்பு!

செளதி விமானத்தில் தீ விபத்து: பெஷாவரில் துரித தரையிறக்கம்

DIN

297 பயணிகளுடன் ரியாத்திலிருந்து பாகிஸ்தான் வந்த விமானம் தீ பற்றியதால் பெஷாவரில் உடனடியாக தரையிறக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தரையிறக்குவதில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கலால் தீ பற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.

பயணிகள் மற்றும் விமான குழுவினர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. ரியாத் முதல் பெஷாவர் வரை இயக்கப்படும் விமானம் தீ பற்றியது தொடர்பாக செளதி ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிக்கையில், தரையிறங்கும்போது ஒரு சக்கரத்தின் பகுதியில் இருந்து புகை வெளிப்பட்டதை உறுதி செய்துள்ள விமான நிறுவனம் பயணிகள் மற்றும் விமான குழுவினர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விமானம் வல்லுநர்களின் தொழில்நுட்ப மதிப்பீட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டவுள்ளதையும் அறிக்கை தெரிவித்துள்ளது.

குளோபல் டிஃபென்ஸ் இன்சைட் அமைப்பு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் சக்கரங்கள் கருகியது தெளிவாக தெரிகிறது. அதன் பதிவில், “விமான போக்குவரத்து கட்டுபாட்டகம் சரியான நேரத்துக்கு விமானத்தில் புகை வருவதை கவனித்து விமானிக்கும் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகளுக்கும் தகவல் தெரிவித்ததால் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. 276 பயணிகள் மற்றும் 21 விமான குழுவினர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் வாக்குரிமைப் பேரணியில் முதல்வர் மு.க. ஸ்டாலின்! | செய்திகள்: சில வரிகளில் | 27.08.25

சூரியின் மண்டாடி சிறப்பு போஸ்டர் வெளியீடு!

ஜம்மு - காஷ்மீர் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு!

வரதட்சிணைக்காக மனைவியை எரித்துக் கொன்ற தலைமைக் காவலர் கைது!

இளமை வானிலே... பார்த்திபா!

SCROLL FOR NEXT