ஜெட் விமானம்  Center-Center-Chennai
உலகம்

ரஷியாவில் ஜெட் விமானம் தீப்பிடித்ததில் 3 பேர் பலி!

விமானத்தில் ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.

DIN

மாஸ்கோவில் ரஷிய பயணிகள் சென்ற ஜெட் விமானம் தீப்பிடித்து எரிந்ததில் மூவர் உடல் கருகி உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக மாஸ்கோவில் உள்ள அதிகாரிகள் கூறுகையில், மாஸ்கோவின் கொலோமென்ஸ்கியில் சூப்பர்ஜெட் 100 ரகத்தைச் சேர்ந்த விமானம், நேற்று ரஷிய தலைநகருக்குத் தென்கிழக்கே லுகோவிட்சியில் உள்ள விமானம் தயாரிக்கும் ஆலையிலிருந்து பயணிகள் இல்லாமல் நேற்று ஊழியர்களின் பயிற்சிக்காகப் புறப்பட்டது.

மாஸ்கோவின் வினுகோவா விமான நிலையத்தை நோக்கிச் சென்றபோது விமானத்தில் ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக விமானம் தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக நாட்டின் உயர்மட்ட மாநில குற்றப் புலனாய்வு அமைப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவீன் பட்நாயக் உடல்நிலை முன்னேற்றம்; இன்று வீடு திரும்புகிறார்

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் புயல் சின்னம்!

விடியல் பயணம்: ஒவ்வொரு மகளிரும் ரூ. 50,000 வரை சேமிப்பு - முதல்வர் ஸ்டாலின்

தீபாவளி முன்பதிவு: சில நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்த ரயில் டிக்கெட்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 12 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT