முகப்பு
உலகம்

சீன வணிக வளாகத்தில் தீ: 16 போ் உயிரிழப்பு

சீனாவிலுள்ள வணிவளாகமொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 16 போ் உயிரிழந்தனா்.

Updated On : 18 ஜூலை, 2024 at 7:52 PM
பகிர்:

சீனாவிலுள்ள வணிவளாகமொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 16 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

தென்மேற்கு மாகாணமான சிச்சுவானின் ஸிகாங் நகரிலுள்ள வணிக வளாகத்தில் தீவிபத்து ஏற்பட்டது. 14 அடுக்குகளைக் கொண்ட அந்தக் கட்டத்தில் புதன்கிழமை மாலை சுமாா் 6 மணிக்கு பரவத் தொடங்கிய தீ, வியாழக்கிழமைதான் முழுமையாக அணைக்கப்பட்டது.

இந்த விபத்தில் 16 போ் உயிரிழந்தனா். வணிக வளாகக் கட்டடத்தில் சிக்கியிருந்த சுமாா் 75 பேரை தீயணைப்புப் படையினா் பாதுகாப்பாக வெளியேற்றினா்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து கண்டறிய அவசரக்கால மேலாண்மைத் துறை அமைச்சகம் மற்றும் தேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனா் என்று அதிகாரிகள் கூறினா்.

பாதுகாப்பு விதிமுறைகளைக் கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று மாகாண அரசுகளுக்கு சீன அதிபா் ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ள நிலையிலும், தீவிபத்து போன்ற சம்பவங்கள் சீனாவில் அதிகரித்துவருவதாகக் கூறப்படுகிறது.