முகப்பு
உலகம்

ரஷியாவில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்: என்ன நேர்ந்தது?

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரஷியாவில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பயணிகள் பாதுகாப்பாக இருப்பதாகத் தகவல்

Updated On : 19 ஜூலை, 2024 at 4:01 AM
ஏர் இந்தியா விமானம்
பகிர்:

தில்லி - சான் பிரான்சிஸ்கோ சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம், அவசரமாக ரஷியாவில் தரையிறக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரஷியாவில் விமானம் தரையிறக்கப்பட்டதாகவும், விமானத்தில் உள்ள பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவக்கப்பட்டுள்ளது.

விமானத்தின் சரக்குப் பெட்டகங்கள் வைக்கும் பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை, விமான ஊழியர்கள் கண்டுபிடித்ததால், அவசரமாக தரையிறக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

புது தில்லியிலிருந்து 225 பயணிகளுடன் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் அவசரமாக ரஷியாவில் தரையிறக்கப்பட்டுள்ளது. பயணிகளுடன், விமான ஓட்டுநர்கள் உள்ளிட்ட 19 விமான ஊழியர்களும் இதில் உள்ளனர். விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டு, அனைவரும், விமான நிலையத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ரஷியாவின் கிராஸ்நோயார்ஸ்க் சர்வதேச விமான நிலையத்தில் ஏர் இந்தியாவுக்கு சொந்தமாக போக்குவரத்து வசதிகள், ஊழியர்கள் இல்லாததால், பயணிகளுக்குத் தேவையான உதவிகளை வழங்க மூன்றாம் தரப்பு ஆதரவை ஏற்பாடு செய்து வருவதாக விமான நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியாவிலிருந்து சான்பிரான்சிஸ்கோவுக்கு பயணிகளை அழைத்துச் செல்வதற்கான விமானத்தை விரைவாக ஏற்பாடு செய்யும் பணியும் நடந்து வருவதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

பயணிகள் உடல்நலம், பாதுகாப்பு மற்றும் அவர்கள் காத்திருப்பது உள்ளிட்ட அனைத்தையும் ஏர் இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது. அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை அனைத்தையும் பகிர்ந்துகொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டும் இதே வழித்தடத்தில் இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரஷியாவில் தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →