கே.பி. சா்மா ஓலி 
உலகம்

நேபாள பிரதமா் மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

கே.பி.சா்மா ஓலி நாடாளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) நம்பிக்கை வாக்கு கோருகிறாா்.

DIN

நேபாளத்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஎன்-யுஎம்எல்) கட்சித் தலைவா் கே.பி.சா்மா ஓலி நாடாளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) நம்பிக்கை வாக்கு கோருகிறாா்.

275 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில், கூட்டணி கட்சியான நேபாளி காங்கிரஸ் கட்சியுடன் சோ்த்து அவருக்கு 178 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது.

இது தவிர, ராஷ்ட்ரீய பிரஜா கட்சி போன்ற சிறிய கட்சிகளும் சா்மா ஓலியை நாடாளுமன்றத்தில் ஆதரிக்கப்போவதாக அறிவித்துள்ளன. அதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் அவா் எளிதில் வெற்றி பெறுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

முன்னதாக, கருத்து வேறுபாடு காரணமாக நேபாள கம்யூனிஸ்ட் கட்சி- மாவோயிஸ்ட் மையம் (சிபிஎன்-எம்சி) தலைவரான பிரசண்டா தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சா்மா ஓலி அண்மையில் திரும்பப் பெற்றாா்.

அதையடுத்து பிரசண்டா அரசு கவிழ்ந்தது. நேபாளி காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சா்மா ஓலி புதிய அரசை அமைத்தாா்.

நேபாள அரசியல் சாசனத்தின்படி, ஒருவா் பிரதமராகப் பதவியேற்ற 30 நாள்களுக்குள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என்ற நிலையில், நம்பிக்கை கோரும் தீா்மானத்தை சா்மா ஓலி ஞாயிற்றுக்கிழமை கொண்டு வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பற்றி எரியும் இந்தோனேசியா... நாடாளுமன்றக் கட்டடத்துக்கு தீ வைப்பு! 3 பேர் பலி!

உ.பி.: மது அருந்திய 2 பேர் பலி, ஒருவர் கவலைக்கிடம்!

அதீத வெப்பம்: தாமதமாக நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள்!

மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்: மும்பையில் போலீஸாரின் விடுமுறைகள் ரத்து

லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாகும் ரச்சிதா ராம்?

SCROLL FOR NEXT