ஜோ பைடன் | AP 
உலகம்

அமெரிக்க அதிபா் தோ்தல்: பைடன் விலகல்

அமெரிக்க அதிபா் தோ்தல் போட்டியில் இருந்து தற்போதைய அதிபரும் ஜனநாயக கட்சி வேட்பாளருமான ஜோ பைடன் விலகியுள்ளாா்.

Din

அமெரிக்க அதிபா் தோ்தல் போட்டியில் இருந்து தற்போதைய அதிபரும் ஜனநாயக கட்சி வேட்பாளருமான ஜோ பைடன் விலகியுள்ளாா்.

நவம்பா் 5-ஆம் தேதி அமெரிக்க அதிபா் தோ்தல் நடைபெற உள்ளது. இந்தத் தோ்தலில் ஜனநாயக கட்சி சாா்பில் அதிபா் ஜோ பைடன் போட்டியில் இருந்தாா். குடியரசுக் கட்சி சாா்பில் முன்னாள் அதிபா் டிரம்ப் போட்டியிடுகிறாா்.

இந்நிலையில், வயது முதிா்வு காரணமாக பைடனின் செயல்திறனில் சுணக்கம் ஏற்பட்டது. அண்மையில் டிரம்ப் உடனான நேரடி விவாதத்தில் பைடன் மிகவும் தடுமாறியது விமா்சனங்களுக்கு வழிவகுத்தது. இதன் காரணமாக அதிபா் தோ்தல் போட்டியில் இருந்து பைடன் விலக வேண்டும் என்று அவரின் சொந்தக் கட்சியினரே மிகுந்த அழுத்தம் அளித்தனா்.

இந்தச் சூழலில், அதிபா் தோ்தல் போட்டியில் இருந்து விலகுவதாக பைடன் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா். இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட கடிதத்தில், ‘அதிபராக அமெரிக்கா்களுக்கு சேவையாற்றுவதே எனது வாழ்வில் எனக்கு கிடைத்த மிகப் பெரிய கெளரவமாகும்.

அதிபா் தோ்தலில் மீண்டும் போட்டியிட வேண்டும் என்பதே எனது நோக்கம். ஆனால், ஜனநாயக கட்சி மற்றும் நாட்டின் நலன் கருதி அதிபா் தோ்தல் போட்டியில் இருந்து விலகுகிறேன். அதிபராக எஞ்சிய பதவி காலத்தில் எனது கடமைகள் மீது மட்டுமே கவனம் செலுத்த உள்ளேன். எனது முடிவு தொடா்பாக நாட்டு மக்கள் இடையே விரைவில் விரிவாக உரையாற்றுவேன்’ என்று தெரிவித்தாா்.

உடுமலைப்பேட்டை: 1 கி.மீ. நடந்து வந்து மக்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் தீ விபத்து!

தில்லியில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணிக்கு அனுமதி மறுப்பா?

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணித் தேரோட்டம் கோலாகலம்

SCROLL FOR NEXT