கமலா ஹாரிஸ் மற்றும் ஜோ பைடன் 
உலகம்

அதிபர் வேட்பாளராக ஜோ பைடன் விலகல்... என்ன சொல்கிறார் கமலா ஹாரிஸ்?

அமெரிக்க அதிபர் வேட்பாளராக ஜோ பைடன் விலகியதைத் தொடர்ந்து கமலா ஹாரிஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

DIN

அமெரிக்க அதிபர் வேட்பாளராக ஜோ பைடன் விலகியதைத் தொடர்ந்து, துணை அதிபர் கமலா ஹாரிஸ் அடுத்த அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்படும் நிலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபா் தோ்தல் போட்டியில் இருந்து தற்போதைய அதிபரும் ஜனநாயக கட்சி வேட்பாளருமான ஜோ பைடன் (81) விலகியுள்ள நிலையில் தனக்குப் பதிலாக அதிபா் வேட்பாளராக துணை அதிபா் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளாா்.

இதனைத் தொடர்ந்து துணை அதிபர் கமலா ஹாரிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடனின் அசாதாரணமான தலைமைத்துவத்திற்கும், பல ஆண்டுகளாக நம் நாட்டிற்கு அவர் ஆற்றிய சேவைக்காகவும் அமெரிக்க மக்கள் சார்பாக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அவருடன் துணை ஜனாதிபதியாக பணியாற்றியதைப் பெரிய மரியாதையாகக் கருதுகிறேன்.

என்னை அதிபர் வேட்பாளராக பைடன் முன்மொழிந்ததற்குப் பெருமை கொள்கிறேன். என்னுடைய நோக்கம் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றியடைவதே.

கடந்தாண்டில், நான் நாடு முழுவதும் பயணம் செய்து, இந்த முக்கியமான தேர்தலில் வேட்பாளரைத் தெளிவாகத் தேர்வு செய்வது பற்றி அமெரிக்கர்களுடன் பேசியிருக்கிறேன். அதையே வரும் நாட்களில் தொடர்ந்து தீவிரமாக செய்யத் திட்டமிட்டுள்ளேன்.

என்னால் முடிந்த அளவு எனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனநாயகக் கட்சியையும், நமது தேசத்தையும் ஒன்றிணைத்து, டொனால்ட் டிரம்ப்பைத் தோற்கடித்து, டிரம்ப்பின் 2025-ம் ஆண்டுக்கான தீவிரமானத் திட்டத்தை முறியடிப்பேன்.

தேர்தலுக்கு நமக்கு இன்னும் 107 நாள்கள் இருக்கின்றன. நாம் அனைவரும், ஒன்றிணைந்து போராடினால், நமக்கு வெற்றி நிச்சயம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

SCROLL FOR NEXT