முகப்பு
உலகம்

நேபாள விமான விபத்து: பலியான 18 பேரும் சௌர்யா விமான நிறுவன ஊழியர்கள்?

நேபாள விமான விபத்தில் பலியான 18 பேரும் சௌர்யா விமான நிறுவன ஊழியர்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது.

Updated On : 24 ஜூலை, 2024 at 11:13 AM
நேபாள விமான விபத்து
பகிர்:

நேபாளத்தில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இன்று சிறிய ரக பயணிகள் விமானம், விமான ஓடுபாதையில் சறுக்கி விபத்துக்குள்ளானதில் அதில் பலியான 18 பேரும் சௌர்யா விமான நிறுவன ஊழியர்கள் என்று ஏஎஃப்பி செய்தி தெரிவிக்கிறது.

சௌர்யா விமான நிறுவனத்தின் விமானத்தில், சோதனை ஓட்டத்துக்காக, இரண்டு விமான ஊழியர்களும், நிறுவனத்தின் ஊழியர்கள் 17 பேரும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

19 பேருடன் புறப்பட்ட பயணிகள் விமானம், திரிபுவன் விமான நிலையத்திலிருந்து புறப்படும்போது, திடீரென சறுக்கி விபத்தில் சிக்கியது. இதில் 18 பேர் பலியாகினர். பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில், விமானத்தின் விமானி மட்டும் வெளியே குதித்து உயிர் தப்பியதாகவும், அவர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்து நேரிட்ட இடத்தில், காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்து, உடல்களை மீட்டனர்.

பொக்காரா நோக்கி புறப்பட்ட சௌர்யா ஏர்லைன்ஸ் விமானம் ஓடு பாதையில் சறுக்கி தீப்பற்றியதில் விமானம் முழுவதும் எரிந்து நாசமானது. இதில் இரண்டு விமானிகளும் சௌர்யா ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் 17பேரும், விமானத்தின் சோதனை ஓட்டத்துக்காக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்தின் நேபாள செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →