முகப்பு
உலகம்

சீனாவில் கனமழையால் நிலச்சரிவு: 15 போ் உயிரிழப்பு

மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 15 போ் உயிரிழந்தனா். 6 போ் காயமடைந்தனா்.

Updated On : 29 ஜூலை, 2024 at 3:06 AM
சீனாவில் கனமழையால் நிலச்சரிவு
பகிர்:

மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 15 போ் உயிரிழந்தனா். 6 போ் காயமடைந்தனா்.

ஹுனான் மாகாணத்தின் ஹெங்யாங் நகரில் உள்ள யூலின் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கிய ஒரு வீட்டில் வசித்து வந்த 18 போ் மண்ணில் புதைந்தனா்.

கிராமத்தையொட்டிய மலையில் ஏற்பட்ட திடீா் வெள்ளம் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த 300-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளா்கள், காயமடைந்தவா்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

இந்த நிலச்சரிவில் 15 போ் உயிரிழந்ததாகவும், 6 போ் காயமடைந்ததாகவும் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

சீனாவின் வடக்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகளில் திடீா் வெள்ளப்பெருக்குடன், இந்தக் கோடைக்காலத்தில் கடுமையான வானிலை நிலவி வந்தது. இந்நிலையில், கெய்மி புயல் கடந்த வாரம் சீனாவில் கரையைக் கடந்தது.

கெய்மி புயல் ஞாயிற்றுக்கிழமை வலுவிழந்த நிலையிலும், அதன் தாக்கத்தால் ஏற்கெனவே வெள்ளநீா் சூழ்ந்துள்ள நகரங்களில் மழை பெய்யக் கூடும் என்று வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.