கோப்புப் படம் 
உலகம்

டிரம்ப் தான் அடுத்த அதிபர்: பிரபல ஜோதிடர் எமி ட்ரிப்

கமலா ஹாரிஸ் தான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்று கடந்த 2020ஆம் ஆண்டில் கூறியிருந்தார்

இணையதளச் செய்திப் பிரிவு

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதத்தில் நடக்கவிருப்பதால், தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் பிரபல ஜோதிடரான எமி ட்ரிப் என்பவர் அமெரிக்காவின் அடுத்த அதிபராக டிரம்ப் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார் என்று கூறியதாக ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.

எமி கூறியிருப்பதாவது, ``டிரம்ப்பின் ஜோதிடக் கணக்குப்படி, அவரது தொழில் மற்றும் இலக்குகளில் கணிக்க முடியாத தன்மையைக் காட்டுகிறது. இருப்பினும், அவருக்கு சில புதுவிதமான நிகழ்வுகள் நிகழக்கூடும்’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்க அரசியலில் ஆகஸ்ட் மாதத்தில் வன்முறை ஏற்படும் என்றும் கூறியுள்ளார். ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதியில், கமலா ஹாரிஸின் ஜனநாயகக் கட்சி தேசிய மாநாடு சிகாகோவில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோ பைடனுக்கு உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படும் என்று கணித்திருந்தார்; அதுமட்டுமின்றி, கமலா ஹாரிஸ் தான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்று கடந்த 2020ஆம் ஆண்டில் கூறியிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்துடன் தமிழ்நாடு முதலிடம் - முதல்வர் பெருமிதம்

திருப்பூர் அருகே எஸ்.ஐ. வெட்டிக் கொலை: ரூ.1 கோடி நிதியுதவி

தமிழக எம்.பி. சுதாவின் தங்கச் செயின் மீட்பு! திருடன் கைது!

உத்தரகண்டில் தொடரும் கனமழை: நிலச்சரிவில் மாயமானவர்களை தேடும் ராணுவம்!

பேரிடர் அபாயங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி

SCROLL FOR NEXT