கமலா ஹாரிஸ் / எலான் மஸ்க் 
உலகம்

கமலா ஹாரிஸ் குரலில் போலி விடியோ: சர்ச்சையைக் கிளப்பும் எலான் மஸ்க்!

அமெரிக்க அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் பேசியதைப் போன்று செயற்கை நுண்ணறிவால் (ஏ.ஐ) தயாரிக்கப்பட்ட போலி விடியோவைப் எலான் மஸ்க் பகிர்ந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

DIN

அமெரிக்க அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் பேசியதைப் போன்று செயற்கை நுண்ணறிவால் (ஏ.ஐ) தயாரிக்கப்பட்ட போலி விடியோவை டெஸ்லா நிறுவனர் பகிர்ந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க முன்னாள் அதிபரும், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப்புக்குத் தனது ஆதரவைத் தெரிவித்து வரும் தொழிலதிபர் எலான் மஸ்க் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கமலா ஹாரிஸ் பேசியதாக போலிக் காணொளி ஒன்றை இரு தினங்களுக்கு முன் பதிவிட்டு ‘இது அற்புதமாக இருக்கிறது’ என்று எழுதியிருந்தார்.

இது சமூக வலைதளவாசிகள் தரப்பில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம், மூன்று மாதங்களில் நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரங்களில் செயற்கை நுண்ணறிவால் ஏற்பட இருக்கும் பாதிப்புகள் குறித்து சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

ஜனநாயகக் கட்சி வேட்பாளரன கமலா ஹாரிஸ் கடந்த வாரம் பிராசரத்திற்காகப் பகிர்ந்திருந்த காணொளியைப் போலவே போலிக் காணொளியும் தயாரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கமலா ஹாரிஸ் குரல் போலவே செயற்கை நுண்ணறிவால் மாற்றம் செய்யப்பட்ட குரல் பதிவைக் கொண்ட அந்தக் காணொளியில், டிரம்ப்புடன் நடந்த விவாதத்தில் ஜோ பைடனின் முதுமை அம்பலப்படுத்தப்பட்டதால் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரிஸ் ஆகிய நான் தேர்தலில் நிற்கிறேன் என கமலா ஹாரிஸ் கூறுவது போல உள்ளது.

மேலும், 59 வயதான கமலா ஹாரிஸை ‘பன்முகத்தன்மையின் கூலி’ எனவும், அவர் ஒரு பெண் மற்றும் கருப்பினத்தைச் சேர்ந்தவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கமலா ஹாரிஸுக்கு முதல் விஷயமாக நாட்டை வழிநடத்தத் தெரியாது என அவரே சொல்வது போல போலியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கமலா ஹாரிஸ் தரப்பில் கொடுக்கப்பட்ட விளக்கத்தில், “அமெரிக்க மக்களுக்கு துணை அதிபர் கமலா ஹாரிஸ் வழங்கும் உண்மையான சுதந்திரம், வாய்ப்புகள் மற்றும் பாதுகாப்பு மட்டுமே தேவைப்படும் என நம்புகிறோம். எலான் மஸ்க், டொனால்ட் டிரம்ப் வழங்கும் போலியான, சித்தரிக்கப்பட்ட பொய்கள் அவர்களுக்கு வேண்டாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காணொளியை முன்னதாகப் யூடியூப் மற்றும் எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்த நபர் இதனைப் பகடி எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், எலான் மஸ்க் எதையும் குறிப்பிடாமல் பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போவோமா ஊர்கோலம்... அஹானா கிருஷ்ணா!

மரகதப் பறவை... பிரணிதா சுபாஷ்!

உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!

TVK Vijay full speech - முதல்வருக்கு சில கேள்விகள்! | TVK | Vijay

இதையெல்லாம் நம்பாதீங்க... ராஜாசாப் படக்குழு அறிக்கை!

SCROLL FOR NEXT