ஜி7 மாநாடு ஏஎஃப்பி
உலகம்

உக்ரைனுக்கு ஆதாயமாகும் ரஷிய சொத்துகள்: ஜி7 நாடுகளின் முடிவு!

உக்ரைனுக்கு 50 பில்லியன் டாலர் நிதியுதவி: ஜி7 நாடுகள் ஒப்புதல்

DIN

மேற்குலக நாடுகளில் உள்ள ரஷியாவின் முடக்கப்பட்ட சொத்துக்களில் இருந்து 50 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 3 லட்சத்து 75 ஆயிரம் கோடி) அளிக்க ஜி7 மாநாட்டில் முடிவு எட்டப்பட்டுள்ளது.

உலகின் முன்னேறிய பொருளாதார நாடுகளை உறுப்பினராக கொண்ட ஜி7 கூட்டமைப்பின் மாநாடு இத்தாலியில் வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் தனது ராணுவத்தை பலப்படுத்திக்கொள்ளவும் உள்கட்டமைப்பை சீராக்கவும் இந்த கடனுதவி அளிக்கப்படவுள்ளது.

ரஷிய மத்திய வங்கியின் பணம் ஏறத்தாழ 280 பில்லியன் அளவுக்கு மேற்குலக நாடுகளில் உள்ளதாகவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைன் மீது படையெடுத்ததால் அவை முடக்கப்பட்டுள்ளதகாவும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

பெரும்பாலானவை ஐரோப்பிய யூனியன் கட்டுப்பாட்டில் உள்ளது. அதன் உறுப்பு நாடுகள் சமீபத்தில் இந்த பணத்திற்கு வருகிற வட்டியை உக்ரைனுக்கு நிதியுதவியாக அளிக்க அனுமதி வழங்கியுள்ளன.

சில மாதங்களில் இந்த கடன் வழங்கப்படும் எனத் தெரிகிறது. வட்டிப் பணம் மட்டுமில்லாத ரஷியாவின் முழு சொத்துக்களையும் உக்ரைனுக்கு நிதியுதவியாக அளிக்க அமெரிக்கா வாதித்தது.

தெற்கு இத்தாலியில் நடைபெற்றுவரும் மாநாடு சனிக்கிழமை முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக நாமக்கல் செயலரின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி!

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - கும்பம்

வார பலன்கள் - மகரம்

வார பலன்கள் - தனுசு

SCROLL FOR NEXT