சர்வதேச யோகா தினத்தையொட்டி நாட்டுக்கான ஆஸ்திரேலிய உயர் ஆணையர் பிலிப் க்ரீன், உலகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்கள் யோகாவை பயிற்சி செய்வதாக தெரிவித்துள்ளார்.
எக்ஸ் வலைத்தளத்தில் இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், யோக ஆர்வலர்களின் காணொலிகளையும் பதிவில் இணைத்துள்ளார். தில்லியில் வெவ்வேறு இடங்களில் யோக பயிற்சியில் ஈடுபடும் ஆணையக ஊழியர்கள் தங்களுக்கு பிடித்தமான ஆசனங்களை குறித்து பேசியுள்ளனர்.
10-வது சர்வதேச தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தாண்டுக்கான கருத்துருவாக ‘தனித்துவம் மற்றும் சமூகம்’ என்பது தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இஸ்ரேல் தூதரகம், தனது அதிகாரிகள் யோகா பயிற்சி மேற்கொள்ளும் விடியோவை எக்ஸ் வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது. அந்த பதிவில், அவர்கள் யோகிகள் இல்லை, இருந்தபோதும் யோகப்பயிற்சி செய்வதை உற்சாகமாக கருதுகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல உக்ரைன் தூதகரமும் யோகா தினக் கொண்டாட்டத்தில் பங்கெடுப்பதாக தெரிவித்துள்ளது.
5000 ஆண்டுகால பழமையான யோக மரபை கொண்டாடுவதில் உடன் இணைகிறோம் என உக்ரைன் தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும், தூதரகத்தில் தொடர்ச்சியாக யோக பயிற்சிகளை உக்ரைன் அதிகாரிகள் 1.5 மாதமாக மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓமனில் உள்ள இந்திய தூதரகத்தின் ஒருங்கிணைப்பில் கப்பலில் யோகப்பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.