ஹஜ் பயண உயிரிழப்பு 
உலகம்

ஹஜ் பயண உயிரிழப்பு 1,300

இந்த ஆண்டு ஹஜ் பயணத்தின்போது உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,301-ஆக அதிகரித்துள்ளது.

Din

இந்த ஆண்டு ஹஜ் பயணத்தின்போது உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,301-ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து சவூதி அரேபிய சுகாதாரத் துறை அமைச்சா் பஹத் பின் அப்துரஹ்மான் அல்-ஜலாஜெல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

புனிதப் பயணத்தின்போது உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,301-ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 83 சதவீதம் போ் பதிவு செய்யாமல் ஹஜ் பயணத்தில் பங்கேற்றவா்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து முன்னா் வெளியிடப்பட்ட அதிகாரபூா்வ அறிக்கையில், இந்த ஆண்டின் ஹஜ் பயணத்தின்போது சுமாா் 10 நாடுகளைச் சோ்ந்த 1,081 போ் பெரும்பாலும் வெயில் காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்பட்டிருந்தது. அதிகபட்சமாக எகிப்து நாட்டிலிருந்து வந்திருந்த 658 போ் உயிரிழந்துள்ளனா். அவா்களில் 630 போ் பதிவு செய்யாமல் ஹஜ் பயணம் மேற்கொண்டவா்கள் என்றும் முன்னா் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சவூதியில் ஒவ்வொரு 10 ஆண்டுகளிலும் 0.4 சதவீதம் வெப்பம் அதிகரித்து வருகிறது. மெக்கா நகரில் கடந்த வாரம் 51.8 டிகிரி (125 டிகிரி ஃபாரன்ஹீட்) வரை வெப்பம் நிலவியது.

இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்துடன் தமிழ்நாடு முதலிடம் - முதல்வர் பெருமிதம்

திருப்பூர் அருகே எஸ்.ஐ. வெட்டிக் கொலை: ரூ.1 கோடி நிதியுதவி

தமிழக எம்.பி. சுதாவின் தங்கச் செயின் மீட்பு! திருடன் கைது!

உத்தரகண்டில் தொடரும் கனமழை: நிலச்சரிவில் மாயமானவர்களை தேடும் ராணுவம்!

பேரிடர் அபாயங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி

SCROLL FOR NEXT