விளாதிமீா் புதின்  
உலகம்

அணு ஆயுத போருக்கு ரஷியா தயாராகவுள்ளது: விளாதிமீா் புதின்

போர் தயார்நிலை: புதின் நிலைப்பாடு அறிவிப்பு

DIN

ரஷியா அணு ஆயுத போருக்கு தயாராகவிருப்பதாகவும் ஆனால் தற்போதைய சூழல் அதனை நோக்கி நகர்த்தவில்லை எனவும் ரஷிய அதிபர் விளாதிமீா் புதின் தெரிவித்ததாக புதன்கிழமை வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உக்ரைனில் முழு அளவிலான படையெடுப்பை தொடங்கி மார்ச் 15-17 தேர்தலில் அவர் வெற்றி பெறுவார் என கணிக்கப்பட்ட நிலையில் புதன்கிழமை ரஷிய அரசின் செய்தி நிறுவனத்துக்கு புதின் பேட்டி அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்தாவது:

ரஷியாவின் இறையாண்மை பாதிக்கப்பட்டால் அணு ஆயுதங்களை பயன்படுத்தும் சூழல் உருவாகும். ராணுவ- தொழில்நுட்ப அளவில் தயாராகவே உள்ளோம்.

அமெரிக்கா, தனது படைகளை ரஷியா பிராந்தியத்திலோ அல்லது உக்ரைனுக்கோ அனுப்பினாலும் அதனை தலையீடாகவே ரஷியா கருதும்.

அமெரிக்காவில் ரஷியா-அமெரிக்கா நாடுகளிடையேயான உறவு, பிராந்திய திட்டமிடலுக்கு போதுமான வல்லுநர்கள் இருக்கிறார்கள். ஆகவே (அணு ஆயுதப் போருக்கு) அதற்கு அவசியம் ஏற்படுகிற எதுவும் இப்போதைக்கு இல்லை. ஆனால் தயாராக இருக்கிறோம் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்முறையாக தேசிய விருது: சிறந்த நடிகையாக ராணி முகர்ஜி!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.87.53 ஆக நிறைவு!

கேஷுவல் லுக்.. ஈஷா ரெப்பா!

வாத்தி படத்துக்காக ஜி.வி. பிரகாஷுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது!

முதல் டெஸ்ட்: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!

SCROLL FOR NEXT