FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

ரஷியா - அமெரிக்கா அணு ஆயுத ஒப்பந்தம் காலாவதி! சீனா வருத்தம்

ரஷியா - அமெரிக்கா இடையேயான அணு ஆயுத ஒப்பந்தம் நீடிக்க சீனா விருப்பம்

Updated On : 5 பிப்ரவரி 2026, 8:08 pm IST
புதின் | ஜின்பிங் | டிரம்ப்
பகிர்:

ரஷியா - அமெரிக்கா இடையேயான அணு ஆயுத ஒப்பந்தம் காலாவதியானது வருத்தமளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

ரஷியா - அமெரிக்கா இடையேயான அணு ஆயுத ஒப்பந்தம் காலாவதியானது குறித்து சீனாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது, "சீனாவின் பார்வையில், நியூ ஸ்டார்ட் காலாவதியானது உண்மையிலேயே வருந்தத்தக்கது. இந்த ஒப்பந்தம் உலகளாவிய நிலைத்தன்மைக்கு இன்றியமையாதது. மேலும், ஒப்பந்தம் முடிவுற்றதால் சர்வதேச அணு ஆயுதக் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் உலக அணு ஒழுங்கின் தாக்கம் குறித்து பரவலான கவலை உள்ளது.

அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டும் என்று ரஷியா கோரியுள்ளது. ரஷியாவின் முன்மொழிவுக்கு அமெரிக்கா பதிலளிக்கும் என்றும், காலாவதியான ஒப்பந்தத்துக்கு ஒரு நல்ல முடிவைத் தரும் என்றும் சீனா நம்புகிறது. இதைத் தான் உலகமும் விரும்புகிறது" என்று குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

ரஷியா - அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தும் அல்லது குறைக்கும் நோக்கில், 2010 ஆம் ஆண்டில் நியூ ஸ்டார்ட் என்ற ஒப்பந்தம் செய்துகொண்டன. இதன்படி, இரு நாடுகளும் தலா 1,550 அணு ஆயுதங்களை மட்டுமே வைத்துக்கொள்ள முடியும். இந்த நிலையில், இந்த ஒப்பந்தம் இன்றுடன் முடிவடைந்தது.

ஒப்பந்தத்தை நீட்டிக்க ரஷியா முன்மொழிந்தாலும், அமெரிக்கா பதிலேதும் தெரிவிக்கவில்லை.

சீனா அணு ஆயுத வளா்ச்சியில் கவனம் செலுத்தி வருவதால், அமெரிக்காவும் தனது ஆயுதக் கிடங்கை அதிகரிக்க முயல்வதாகக் கூறப்படும் நிலையில், ரஷியா - அமெரிக்கா ஒப்பந்தத்தை மீண்டும் கொண்டுவர விரும்புவதாக சீனா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Expiration of US - Russia arms treaty regrettable says China

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments