ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் உக்ரைன் மீட்பு வீரர்கள்
ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் உக்ரைன் மீட்பு வீரர்கள்  UES/ AP
உலகம்

உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல்: ரஷிய தேர்தல் காரணமா?

DIN

தெற்கு உக்ரைன் நகரமான ஒடேசாவில் வெள்ளிக்கிழமை ரஷியா நடத்திய தாக்குதலில் குறைந்தது 14 பேர் பலியாகியுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதல் ஏவுகணை அங்குள்ள வீடுகள் மீது ஏவப்பட்டது. அங்கு மீட்புப் படை வீரர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் வந்தவுடன் இரண்டாவது ஏவுகணையை ரஷியா ஏவியுள்ளது.

இந்த தாக்குதல் ரஷியாவில் தேர்தல் தொடங்கியுள்ள நிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிர்ச்சியில் உக்ரைன் மீட்பு வீரர்

துறைமுக நகரமான ஒடேசாவில் ரஷியா மேற்கொண்டுள்ள ஏவுகணை தாக்குதல்களால் 46 பேர் காயமுற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒடேசா பகுதியில் உள்ள 10 வீடுகள் மற்றும் அத்தியாவசிய மீட்பு கருவிகள் சேதமடைந்துள்ளன.

ரஷிய தாக்குதலில் காயமுற்றவருக்கு சிகிச்சை அளிக்கும் சக வீரர்கள்

ஒரே இடத்தில் இரண்டாவது முறை தாக்குதல் நடத்துவதை ‘டபுள் டேப்’ தந்திரம் என ராணுவத்தில் குறிப்பிடுவர்.

கடந்த 2 வாரத்தில் இது இரண்டாவது தாக்குதல். முன்னதாக மார்ச் 2 அன்று ரஷிய டிரோன் அடுக்கு மாடிக் குடியிருப்பைத் தாக்கியதில் 5 குழந்தைகள் உள்பட 12 பேர் பலியாகினர்.

உக்ரைனின் ஏற்றுமதியை தகர்க்கும் பொருட்டு துறைமுக உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷியா கடந்தாண்டு முதல் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரிவினைவாதத்தை ஆதரிக்க பேச்சு சுதந்திரம் வழங்கப்படவில்லை: கனடா குறித்து ஜெய்சங்கா் கருத்து

இந்திய தோ்தலில் தலையீடு? ரஷியா குற்றச்சாட்டை நிராகரித்தது அமெரிக்கா

பாா்வைத்திறன் குறையுடைய மாணவா் சாதனை

மருத்துவமனையின் முதுகெலும்பாக திகழும் செவிலியா்கள்: வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் இரா.ராஜவேலு

கல்லூரியில் உலக செவிலியா் தினம்

SCROLL FOR NEXT