முகப்பு
உலகம்

ஆப்கன் விவகாரத்தில் நிதானம்: பாக்.கிற்கு அமெரிக்கா அறிவுரை

Updated On : 20 மார்ச், 2024 at 12:41 AM
பகிர்:
Updated On : 19 மார்ச், 2024 at 10:50 PM

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானிலிருந்து பயங்கரவாதம் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையின் போது பாகிஸ்தான் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.

மேலும், பாகிஸ்தானில் தாக்குதல் நடத்துவதற்கு தங்கள் பகுதியை பயங்கரவாதிகள் பயன்படுத்த தலிபான்கள் அனுமதிக்கக்கூடாது என்றும் அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தங்கள் நாட்டில் தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளுக்கு ஆப்கன் தலிபான்கள் புகலிடம் அளிப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது.

இந்த நிலையில், ஆப்கன் எல்லையையொட்டி கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 7 வீரா்கள் உயிரிழந்தனா். அதற்கு பதிலடியாக ஆப்கனில் பாகிஸ்தான் விமானத் தாக்குதல் நடத்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கா இவ்வாறு கூறியுள்ளது.

Advertisement